Friday, September 23, 2011

ஜும்ஆ தொழுகையை நபிவழியில் நடத்துவோம்.


அன்பின்  இஸ்லாமிய  சகோதரர்களே ! உலக மக்கள்  அனைவருக்கும்  நேர்வழி காட்டியாக அனுப்பப்பட்ட  கடைசி  இறைத் தூதர்  நபிகள்  நாயகம்(ஸல்அவர்கள்.  ஒவ்வொரு முஸ்லிமும்  தனது  வாழ்வை  எப்படி அமைத்துக்கொள்ள  வேண்டும்  என்பதை  மிக  அழகாக நமக்குக்  காட்டித் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வும்  அவனுடைய  தூதர் (ஸல்அவர்களும்  நமக்கு எதையெல்லாம்  மார்க்கத்தின் பெயரால்  செய்யும்  படி ஏவியிருக்கிறார்களோ  அவற்றை  மாத்திரம்  தான்  நாம்  செய்ய வேண்டும்எவற்றை  தவிர்ந்துகொள்ளும்  படி  ஏவியிருக்கிறார்களோ  அவற்றை கண்டிப்பாக நாம்  தவிர்ந்து  நடக்க வேண்டும்.
இந்த  அடிப்படையில்  வௌ்ளிக்கிழமைகளில்  நாம்  நிகழ்த்தும்  ஜும்மாவின் சட்டங்கள்  பற்றி நபியவர்கள் மிகத் தெளிவான  வழிகாட்டுதல்களை  நமக்கு வழங்கியிருக்கிறார்கள்ஆனால் இன்று  நமக்கு  மத்தியில்  மார்க்கம்  பேசக்கூடிய  பலர்  இந்த  வழிமுறைகளை  மறந்து அல்லது  வேண்டுமென்று மறைத்து  மார்க்கத்திற்கு  முரணான  காரியங்களை  ஜும்மாவின்செயல்பாடுகளாக  அமைத்திருப்பதைக்  காணக் கிடைக்கிறது.
ஆகவே  ஜும்ஆவை  நபியவர்கள்  காட்டிய  விதத்தில்  செய்ய  வேண்டும் என்பதினாலும்நாம் செய்யும்  ஜும்ஆக்களில்  மார்க்கத்திற்கு  மாற்றமாக இருக்கும்  காரியங்களை  தெளிவுபடுத்த வேண்டும்  என்ற நன்நோக்கத்திலும்  தான்  இந்தப்  பிரசுரம்  வெளியிடப்படுகிறது.
 ஜும்ஆவிற்கு இரண்டு பாங்குகளா?
ஜும்ஆ நாளில் இரண்டு பாங்கு சொல்லும் வழக்கம் நடைமுறையில்இருக்கின்றதுஅனேகமாக எல்லா பள்ளிகளிலும் ஜும்ஆவில் இரண்டுபாங்குகள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.
தொண்ணூற்றி ஒன்பது சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில்காணப்படுகின்ற இந்த நடைமுறை பற்றி நபிகள் நாயகம் சொன்னார்களாஎன்று பள்ளிவாசல் இமாமிடம் கேட்டுப் பாருங்கள்யாரிடம் கேட்டாலும்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறவில்லை என்று தான்சொல்வார்கள்.இதற்கு எந்த ஒரு ஹதீசையும் எடுத்துக் காட்ட முடியாது.
சாயிப் பின் யஸீத் (ரலிஅவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்அவர்களதுகாலத்திலும் அபூபக்கர் (ரலி), உமர் (ரலிஆகியோரது காலத்திலும்ஜும்ஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீதுஅமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்ததுஉஸ்மான் (ரலிஅவர்கள் (ஆட்சிக்)காலத்தில் (மதீனாவில்மக்கள் தொகை அதிகரித்தபோது “ஸவ்ராஎனும் கடைவீதியில் (பாங்குஇகாமத் அல்லாமல்மூன்றாவதுஅறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.                                                                (நூல்புகாரி 861)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் காலத்தில் ஜும்ஆவில் ஒரு பாங்குதான் சொல்லப்பட்டு வந்தது என்பதை இதன் மூலம் அறியமுடிகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களின் வழிமுறைக்கு முரணில்லாதவகையில் உஸ்மான் (ரலிஅவர்களின் செயலை பின்வருமாறு விளங்கமுடியும்.
உஸ்மான் (ரலிஅவர்கள் அதிகப்படுத்திய அறிவிப்பு என்பது பாங்கு அல்ல.அவர் பாங்கின் வாசகங்களைக் கூறுமாறு உத்தரவிடவில்லைமாறாகமக்களுக்கு தொழுகையை ஞாபகப்படுத்துவதற்கு பாங்கு போன்று இல்லாதசாதாரண அறிவிப்பை மட்டுமே அதிகப்படுத்தினார்கள் என்று விளங்கிக்கொண்டால் இந்த முரண்பாடும் வராதுஇதனை பின்வரும் அறிவிப்புஉறுதிப்படுத்துகின்றது.
 உஸ்மான் (ரலிஅவா;கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போதுசொல்லப்படும் முதலாவது பாங்கை போன்றது அல்லமக்கள்அதிகமானதால் உஸ்மான் (ரலிஅவா;கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒருஅறிவிப்பை சொல்லச் சொன்னார்கள்.’ (இப்னு மாஜா - 1125)
ஒரு பேச்சுக்கு உஸ்மான் (ரலிஅவர்கள் பாங்கைத் தான்அதிகப்படுத்தினார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் இதனால் இரண்டுபாங்குகள் கூறுவது மார்க்க வழிமுறையாகாதுஏனென்றால்நபித்தோழர்களின் சொல் செயல் மார்க்க ஆதாரமாக முடியாதுகுறிப்பாகநபிமொழிக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
எனவே,  இந்த அடிப்படையில் நபி (ஸல்அவர்கள் ஜும்ஆவில் ஒரு பாங்குகூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.
இவ்விஷயத்தில் உஸ்மான் (ரலிஅவர்களைப் பின்பற்றுவதாக கூறும்போலிகள் உண்மையில் உஸ்மான் (ரலிஅவர்களைப் பின்பற்றவில்லை.
உஸ்மான் (ரலிகடைத்தெருவில் இரண்டாவது அறிவிப்பைஅதிகப்படுத்தியதாகவே மேற்கண்ட ஹதீஸில் உள்ளதுஇதை இவர்கள்பின்பற்றுவதாக இருந்தால் உஸ்மான் (ரலிசெய்தது போல் கடைத்தெருவில்தான் இரண்டாவது பாங்கு சொல்ல வேண்டும்ஆனால் இரண்டாவது பாங்குசொல்பவர்கள் யாரும் கடைத் தெருவில் சொல்வதில்லைமாறாகபள்ளிவாசலுக்குள்ளே சொல்லி வருகிறார்கள்.
மேலும்இந்த நடை முறை உஸ்மான் (ரலிஅவா;களே புதிதாகஉருவாக்கியதாக குறிப்பிடும் இமாம் ஷாபீஃ அவா்கள்இதில் தனதுவிருப்பமும் தீர்வும் என்ன என்பதை பின்வருமாரு குறிப்பிடுகிறார்கள்.
இமாம் பள்ளியினுல் நுழைந்து மிம்பா் மீது அமா்கின்ற போதுஜூம்ஆவுக்கான பாங்கு அமைந்திருப்பது எனக்கு மிகவும்விருப்பமானதாகும்.’
(பார்க்கஅல் உம்மு : பாகம் - 1, பக்கம் - 334)
ஜூம்ஆவின் முன் ஸூன்னத்திற்கான முஅத்தினின் அழைப்பு
பெரும் பாலான பள்ளிகளில் ஜூம்ஆ தினத்தன்று அதான்சொல்லப்பட்டவுடன்வருகை தந்திருப்போரை பார்த்து ‘ஸலாது ஸூன்னதில்ஜூம்ஆ ரஹிமகுமுல்லாஹ் -  ஜூம்ஆவின் முன் ஸூன்னத்து இரண்டுரக்அத்துகளை தொழவாருங்கள்அருள்பாலிக்கப்படுவீர்கள்!’ என்றுமுஅத்தின் ஒரு வாசகத்தை மொழிவார்ஆனால்இவ்வாறு சொல்வதற்குநபிமொழிகளில் எந்தவொரு சான்றும் கிடையாது.தவிர்க்க வேண்டியபித்அத்துகளில் இதுவும் ஒன்றாகும்.
மஃஷா் ஓதல் மார்க்கமாகுமா?
ஜூம்ஆ உரை நிகழ்த்துவதற்கு இமாம் வருகை தரும் போதுமுஅத்தின்கையிலே அஸாவை ஏந்தியவாறு மஃஷா் என்ற பெயரில் பின்வரும்செய்தியை நபிமொழி என்ற பெயரில் சப்தமிட்டு கூறுவார். “முஸ்லிம்களே!அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாகநபி (ஸல்அவா்கள் கூறியசெய்தியை அபுஹூரைரா (ரலிஅவா்கள் அறிவிக்கிறார்கள்.இது புகாரி,முஸ்லிம் என்ற ஹதீஸ் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுஜூம்ஆஎன்பது ஏழைகளுக்கு ஹஜ்ஜாக இருக்கிறதுபரம ஏழைகளுக்கு பெருநாளாகஇருக்கிறது.அவை இரண்டு ரக்அத்துகளுக்கு சமமானதுஉரை நிகழ்த்துபவா்மிம்பரில் ஏறிவிட்டால் யாரும் பேசாதீர்கள்!” இதன் பிறகே அஸா இமாமின்கையில் வழங்கப்படும்இப்படி அஸாவை வழங்கும் முன்னா் மஃஷா்ஓதுவது நபி வழியில் இல்லாத பித்அத்தாகும்அத்தோடுஇப்படியொருசெய்தி புகாரியிலோ முஸ்லிமிலோ இடம்பெறவேயில்லை. ‘ஜூம்ஆ உரைநிகழ்த்தும் போது அமைதியாக இருங்கள்!’ என்பது மட்டுமே ஆதாரபுர்வமானநபிமொழிகளில் இடம்பெற்றுள்ளதுஇதை மஃஷராக ஓதலாமாஎன்றால்அதனை நபியவா்கள் ஓதியதாக எந்தவொரு அறிவிப்புக்களும் இல்லை.எனவேஇதுவும் ஜூம்ஆ அன்று நடைபெறும் ஒரு பித்அத்தாகும்
ஜும்ஆ செய்பவர் தடி (அஸாவைத்துக்கொள்ள வேண்டுமா?
ஜும்ஆ குத்பாவை நிகழ்த்தக் கூடியவர் மிம்பரில் தனது கையில் ஒரு தடியைவைத்துக் கொள்ளும் வழமை நம்மவர்களிடத்தில் இருந்து வருகிறது.ஆனால்முஅத்தின் மஃஷா் ஓதி அஸாவை இமாமுக்கு வழங்குவதற்கும்மிம்பரில் பிரச்சாரம் செய்பவர் கையில் தடியை (அஸாவைத்துக்கொள்வதற்கும் எந்த ஆதாரமும் ஸஹீஹான ஹதீஸ்களில் இல்லைஇதுதொடர்பாக மாற்றுக் கருத்துடையவர்கள் காட்டும் செய்திகள் எதுவும்ஆதாரமாக எடுக்கத் தகாத பலவீனமான செய்திகள் ஆகும்.
அரபியில் தான் ஜும்ஆ உரை அமைய வேண்டுமா?
பொதுவாக பெரும்பாலான பள்ளிகளில் ஜும்மாவின் ஆரம்ப உரையை தமிழ்மொழியிலும் இரண்டாவது உரையை அரபியிலும் செய்யும் வழமை இருந்துவருகிறது.
நபியவர்கள் ஜும்ஆவின் இரண்டு உரைகளையும் அரபியில் தான்செய்திருக்கிறார்கள்ஏன் என்றால் அவர்களின் தாய் பாஷை அரபிஅதனால்தான் அரபியில் உரையாற்றினார்கள்ஜும்ஆ உரை என்பது வந்திருக்கக்கூடியவர்களுக்குரிய ஒரு உபதேசமாகும்அந்த உபதேசம் அவர்களின் தாய்மொழியில் தான் அமைய வேண்டும்அப்போதுதான் மிம்பரில் இருப்பவர்என்ன சொல்கிறார் என்பது மக்களுக்குப் புரியும்.மக்களுக்கு போதனைசெய்வதும்அதன் மூலம் மக்கள் திருந்த வேண்டும் என்பதும்  தான்குத்பாவின் அடிப்படை நோக்கம் என்பதை நபிகளாரின் குத்பா பற்றிய செய்திஎமக்கு உணா்த்துவதனை காணலாம்.
 நபி (ஸல்)  அவா்கள் இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவார்கள்.இரண்டிற்கும் இடையே (சொற்பொழிவின் போதுஅமா்வார்கள்.குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள்.மக்களுக்கு போதனை செய்வார்கள்.’(ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி), நூல்முஸ்லிம்)
இமாம் சொல்லும் நான்கு விடயங்களை அறிந்து வாழ்வை வழமாக்கவேண்டிய குத்பாக்கள் இந்நோக்கத்தை இன்று நிறைவேற்றுகின்றனவா?இன்று நடைமுறையில் உள்ள இரண்டாம் குத்பாவை அரபியில் ஓதுவதால்இமாம் என்ன சொல்கிறார் என்பதையே அறிய முடியாத துர்ப்பாக்கிய நிலைஉருவாகி விடுகிறதுஎனவேஇரண்டு குத்பாக்கள் செய்வது தான் நபிவழியேதவிர அரபு மொழியில் தான் உரை நிகழ்த்த வேண்டும் என்பதல்லஆனால்நம்மவர்கள் இரண்டாவது உரையை அரபியில் செய்வார்கள் முதல் உரையைதமிழில் செய்வார்கள்இரண்டாவது உரை அரபியில் தான் அமையவேண்டும் என்பது இவர்களின் வாதமாகும்இரண்டாம் உரையை அரபியில்தான் செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் முதல் உரையையும் அரபியில்செய்ய வேண்டியதுதானே அதை மாத்திரம் ஏன் தமிழில் செய்ய வேண்டும்?
ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் கூற வேண்டுமா?
அபூபக்ர் (ரலிஉள்ளிட்ட நான்கு கலீபாக்களின் பெயர்களையும்நபிகள்நாயகம் (ஸல்அவர்களினகுடும்பத்தினா்களின் பெயர்களையும் வாசித்துகுத்பாவில் துஆ செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்காலத்தில்இருக்கவில்லைஇருந்திருக்கவும் முடியாதுதனக்குப் பின் யார் கலீபாவாகவரவேண்டும் என்பதையே மக்களுக்கு அறிவிக்காத போதுஎப்படி தனக்குப்பின் வந்த நான்கு கலீபாக்களின் பெயரைச் சொல்லி நபிகளார் துஆசெய்திருக்க முடியும்;? மேற்கண்ட தோழர்கள் கலீபாக்களாக நியமிக்கப்பட்டகாலத்திலும் இப்படி ஒரு நடை முறை அவர்களால்அமுல்படுத்தப்படவில்லைமிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள் தான் இப்படிஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்ஒவ்வொரு வாரமும் அந்தநபித்தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்பதும்அவர்களுக்காக துஆ செய்வது ஜும்மாவின் விதிமுறைகளில் ஒன்றாகும்என்ற நிலையை ஏற்படுத்துவதும் பித் அத்தாகும்இது பாவமானசெயலாகும்இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இமாம் இரு குத்பாக்களுக்கிடையில் அமரும் போது முஅத்தின்ஸலவாத்துச் சொல்லுதல்
இமாம் முதலாவது உரையை செய்துவிட்டு சற்று அமா்வார்.மீண்டும்இரண்டாவது குத்பாவுக்காக எழும்புவார்.இவ்வாறு இருகுத்பாக்களுக்கிடையில் இமாம் அமரும் போதுஅவரை எழுந்து நிற்கச்செய்வதற்காக முஅத்தின் ‘அல்லாஹூம்ம ஸல்லிவசல்லிம் வபாரிக்வசல்லிம் அலை’ என்று ஸலவாத்துச் சொல்லும் நடைமுறை பெரும்பாலானபள்ளிகளில் இருக்கிறது.இதுவும் நபிவழியில் இல்லாத புது வழியாகும்.நபிகளார் இவ்வாறு அமரும் போது பிலால் (ரலிஅவா்கள் ஸலவாத்துச்சொன்னதாக எந்தவொரு செய்தியும் வரவில்லை.எனவேஇதை செய்வதும்பித்அத்தாகும்.
 ஜும்ஆத் தொழுகை நிறைவேற  40 பேர் அவசியமா?
ஜும்ஆத் தொழுகை நடத்துவதற்கு குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டும்என்று மத்ஹப் நூற்களில் சட்டம் கூறப்பட்டுள்ளதுஆனால் இவ்வாறுநிபந்தனையிடுவதற்கு குர்ஆனிலோ ஏற்கத்தகுந்த நபிமொழிகளிலோ எந்தஆதாரமும் இல்லைஇதனை ஹதீஸ் கலை அறிஞர்களான இமாம் இப்னுஹஜா் அஸ்கலானிஇமாம் சுயுத்தி போன்றோரும் குறிப்பிடுகின்றனா்.(பார்க்கபத்ஹூல் பாரிபாபுல் ஜூம்ஆஅல் ஹாவி லில் ஃபதாவா - பாகம்: 1,பக்கம் : 101-104) எனவேமார்க்கத்தில் கூறப்படாத நிபந்தனைகளைஇடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை.
ஜும்ஆவிற்கு நாற்பது நபர்கள் இருக்க வேண்டும் என்ற அளவுகோல் தவறுஎன்பதை பின்வரும் ஹதீஸ் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிகூறினார்கள் : நாங்கள் நபி (ஸல்)அவர்களுடன் (ஜும்ஆத்தொழுது கொண்டிருந்தபோது உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்ததுஅதைநோக்கி மக்கள் சென்று விட்டனர்பன்னிரெண்டு நபர்களைத் தவிரவேறு எவரும் எஞ்சியிருக்கவில்லைஇந்த நேரத்தில் தான், ‘அவர்கள்வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோகண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்.’ (62:11) என்ற வசனம் இறங்கியது. (புகாரி - 936)
நபி (ஸல்அவர்கள் ஜும்ஆ நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டுநபர்கள் மட்டுமே இருந்துள்ளனர்ஜும்ஆவிற்கு 40 நபர்கள் அவசியம் இருக்கவேண்டும் என்றால் பன்னிரெண்டு நபர்களை மட்டும் வைத்துக் கொண்டு நபி(ஸல்அவர்கள் ஜும்ஆ நடத்தியிருக்க மாட்டார்கள்எண்ணிக்கைகுறைவாக இருப்பதற்கும் ஜும்ஆவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைஎன்பதால் தான் நபி (ஸல்அவர்கள் தொடர்ந்து ஜும்ஆவைநடத்தியுள்ளார்கள்.
ஆகஜும்ஆ தொழுகைக்கும் எண்ணிக்கைக்கும் எந்தத் தொடர்பும்இல்லை.இருவா் இருந்தாலேயே ஒருவா் ஜூம்ஆ உரை நிகழ்த்திமற்றவா் அவருடன் இணைந்து ஜூம்ஆ தொழுகையம் நடாத்த முடியும்.
மிம்பரில் வைத்து கூட்டு துஆ கேட்டல்.
பெரும்பாலான பள்ளிகளில் ஜும்மா குத்பா நடத்தும் இமாம் குத்பாவின்போது மிம்பரில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்காகவும்,உத்தமா்களுக்காகவும்நமது பாவங்களுக்காகவும் துஆ செய்வார்கீழேஇருக்கக் கூடியவர்கள் அதற்கு சப்தமாக ஆமீன் சொல்லுவார்கள்இதுநபியவர்கள் காட்டித் தராத பித்அத்தான பாவமான காரியமாகும்.
நன்மை என்று நினைத்துக் கொண்டு செய்யும் இக்காரியத்தினால்நன்மைக்குப் பதில் பாவம் தான் நமக்குக் கிடைக்கிறதுஇந்த பித்அத்தானகாரியத்தை நாம் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்இறைவனிடம்துஆ செய்யும் போது பணிவுடனும்இரகசியமாகவும் கேட்குமாறு குர்ஆன்ஏவுகிறதுகூட்டு துஆ எனும் நடைமுறை இதற்கு எதிராக இருப்பதைகாணலாம்உங்கள் இறைவனைப் பணிவுடனும்இரகசியமாகவும்பிரார்தனை செய்யுங்கள்.! வரம்பு மீறியோரை அவன் நேசிக்கமாட்டான். (7 : 55)
நபியவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவை கூட தனது தொழுகையில் கூட்டுதுஆ ஓதியதற்கோ நபித் தோழர்கள் ஆமீன் சொன்னதற்கோ எந்தவிதஆதாரமும் சுன்னாவில் கிடையாதுநபியவர்களின் குத்பாக்களில் இன்றுபள்ளிகளில் துஆ ஓதுவதைப் போன்ற ஒரு நடை முறை இருக்கவேயில்லை.ஆக இப்படியொரு வழிமுறையை நாம் நடைமுறைப் படுத்துவது பாவமானபித்அத்தான காரியமாகும்.
ஐங்காலத் தொழுகையின் பின் கேட்கப்படும்கூட்டு திக்ரும்கூட்டுதுஆவும்
இன்று அனைத்து பள்ளிகளிலும் தொழுகை முடிந்ததன் பிறகு இமாம்சப்தமிட்டு ‘ஸூப்ஹானல்லாஹ்அல்ஹம்துலில்லாஹ்,அல்லாஹூஅக்பா் எனும் திக்ருகளையும்சில பள்ளிகளில் அப்ழலுத் திக்ர் லாஇலாஹஇல்லல்லாஹ் எனும் திக்ரையும் மஃமூன்களுக்கு சொல்லிக் கொடுக்கும்நடைமுறையையும்இதன் பிறகு இமாம் துஆ கேட்க மஃமூன்கள் ஆமீன்சொல்லும் காட்சியினையும் காண முடிகிறதுஇவ்வாறு திக்ருகளைசப்தமிட்டு சொல்வதற்கும்துஆக்களை சப்தமிட்டு கேட்பதற்கும் நபிவழியில்எந்தவொரு சான்றும் இல்லைநபியவா்கள் 10 ஆண்டு காலங்கள்ஜமாஅத்தாக தொழுகை நடாத்தினார்கள்.ஆனால்ஒரு வக்து தொழுகையின்பின்னா் கூட திக்ருகளை ஸஹாபாக்களுக்கு சப்தமிட்டு சொல்லிக்கொடுத்ததாகவோநபியவா்கள் துஆ கேட்க ஸஹாபாக்கள் ஆமீன்சொன்னதாகவோ ஒரு ஹதீஸை கூட மறுமை நாள் வரை காண்பிக்கமுடியாதுஎனவேஇதுவும் ஒழிக்கப்பட வேண்டிய பித்அத்தாகும்.
இமாமுக்கு என்று பிரத்தியேக உடை உண்டா?
இன்றுஒருவா் ஜூம்ஆ உரை நிகழ்த்த வேண்டுமாயின் அவா்ஏனையவா்களை விட்டும் தன்னை வேறுபடுத்திக் காட்டும் விதத்தில்அமைந்த உடைகளை அணிந்திருக்க வேண்டும் என்ற நிலை பெரும் பாலானஊர்களில் நிலவுவதை காணலாம்.தொப்பிஅதன் மீது தலைப்பாகைஜூப்பாஎனும் நீண்ட அங்கிதோள்களின் மீது சால்வை,கால் பாதங்களுக்குகாலுறை(சொக்ஸ்எனும் ஆடைகள் ஒரு இமாமின் ஆடைகளாக இன்றுமாறிப்போய் இருப்பதை பார்க்கிறோம்இவ்வாறுஜூம்ஆ உரை நிகழ்த்தும்இமாம் உடையணிந்திருக்க வேண்டும் என்றோஇன்ன ஆடையைத் தான்இமாம் அணிய வேண்டும் என்றோ நபி (ஸல்அவா்கள் சொன்னதாகஎந்தவொரு செய்தியும் ஹதீஸ்களில் வரவில்லை.மாற்றமாக பிறரைவிட்டும் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டும் விதமாய் ஆடையணிவதைதடை செய்யும் நபிகளாரின் அறிவிப்பைத் தான் ஹதீஸ்களில் காணமுடிகிறதுஒருவரது அவ்ரத்தை மறைக்கும் விதமாய் எந்த ஆடையைஅணிந்தாலும் அது குற்றமாக ஆகமாட்டாது.இதற்கு மாற்றமாக இதைத்தான்அணிய வேண்டும் என்று யாராவது கூறுவார்களாயின் அவா்கள் தங்களதுகூற்றுக்கு நபிவழியிலிருந்து ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.
பித்அத்துவாதிகளே எச்சரிக்கை!
நாம் புரியும் எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் அது நபி (ஸல்அவா்கள்காட்டித்தந்த அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்நபிவழிக்குமாற்றமாக எந்தப் பெரிய அறிஞா் சொல்லியிருந்தாலும் அதுபுறக்கணிக்கப்பட வேண்டிய குப்பை என்பதில் எள்முனையளவு கூடசந்தேகமில்லைநாளை மறுமையில் நம் வணக்க வழிபாடுகள்இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டுநாம் வெற்றிபெற வேண்டுமாயின்எமது வாழ்விலும் வணக்கத்திலும் பித்அத்துகள் இடம் பெறக் கூடாது.யாருடைய வாழ்வில் பித்அத் எனும் நபிவழியல்லாத புது வழிகள்இடம்பெற்று விடுகிறதோ அவரின் அமல்கள் யாவும் அல்லாஹ்வினால்நிராகரிக்கப்பட்டு விடும்எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒருஅமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் (நூல் : முஸ்லிம், 3442), இந்தமார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அதுநிராகரிக்கப்படும் (நூல் : புகாரி, 2697)
எனவேநாமும் நபிவழியில் நடப்பதோடுபிறரையும் அதன் பால் அழைக்கும்நன்மக்களாக மாறவேண்டும்தூய நபிவழியை பின்பற்றுவதற்காகபித்அத்துகளை விட்டும் விலகி நடப்பவா்களை யார் எதிர்க்கின்றனரோஅவா்கள்  நாளை மறுமையின் இறைவனின் விசாரணை மன்றத்தினைஅஞ்சிக் கொள்ளட்டும்

No comments:

Post a Comment