Tuesday, September 27, 2011

பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்) - Bermuda Triangle





உலகின் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்மங்களில் பெர்முடா முக்கோணமும் ஒன்று..பெர்முடா,ப்ளோரிடா மற்றும் போர்டேரிகோ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனபடுகிறது.. இந்த பகுதியினூடாக செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..

இந்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது ம் 1945 ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மூலம் ஆகும்..1945ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற அமெரிக்க கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம் மாயமாக மறைந்து போனது...முதலில் காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளகியிருக்கலாம் என்றே கருதப்பட்டது..

ஆனால் ஆய்வுகளின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும்,விமானத்தை ஒட்டிய விமானி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்றும் கூறப்பட்டது..காணாமல் போன விமானத்தை தேடி 13 பேர் கொண்ட ஓர் மீட்பு குழு இன்னுமொரு விமானத்தில் புறப்பட்டது.... ஆனால் பயிற்ச்சி விமானம் போலவே மீட்பு விமானமும் மாயமாக மறைந்து போனது..

இன்று வரை அந்த இரு விமானங்களுக்கும் அதில் பயனித்தவர்களுகும் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது..மூன்று வருடங்கள் கழித்து 32 பயணிகளுடன் போடேரிகோவிலிருந்து மியாமி நோக்கி புறப்பட விமானம் மாயமாக மறைந்தது..இன்றுவரை அதன் சிதைவுகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை..





இதே வருடம் அசாரோசில் இருந்து பெர்முடா நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாக மறைந்து போனது..பின்பு 1949 ம் ஆண்டு பெர்முடாவில் இருந்து ஜமெயக்கா நோக்கி புறப்பட்ட விமானம் காணாமல் போனது...

இதே போல் 1963ம் ஆண்டு 39 பேருடன் சென்ற கப்பல் ஒன்று இந்த பகுதியில் மாயமாய் மறைந்தது...பின்பு 1969 ம் ஆண்டு இந்த முக்கோணத்தின் மீது பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் ரேடியோ தொடர்பு அறுந்து போய் பின்பு அதன் கெதி யாருக்கும் தெரியாமல் போனது..



இந்த மர்மங்களுக்கு பலர் பலவிதமான விளக்கம் கொடுத்தனர்..சிலரின் கருத்துப்படி இந்த கடல் பகுதியில் ராட்சச சுழிகள் இருப்பதாகவும் அவைதான் கப்பல்களை விழுங்குவதாகவும்,வேறு சிலரோ இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த கானாமல்போதல்களுக்கு காரணம் எனவும் கூறுகின்றனர்...

ஆனால் ஆராய்சியாளர்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது....சில இயற்கை நிகழ்வுகள் தான் இதற்கு காரணம் என்பதே இவர்களின் வாதமாகும்..இந்த முக்கோண பகுதியில் மின்காந்த புலம் ஏனைய இடங்களை விட வலுவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்....வலுவான மின்காந்த புலத்தால் கப்பல் மற்றும் விமானங்களின் திசையறி கருவிகள் குழப்பமடைந்து அவை வேறு திசையில் பயணித்து விபத்துக்குள்ளவதாக விஞ்ஜானிகள் தெரிவிகின்றனர்..மேலும் கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும் மெதேன் வாயு காரணமாக தண்ணீரின் அடர்த்தி குறைவடைந்து கப்பல்கள் மூழ்குவதாகவும் தெரிவிக்க படுகிறது....யார் என்ன கூறினாலும் பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட பயங்கர இடமாகவே இன்றும் கருத படுகின்றது....

அந்த பகுதில் என்ன நடக்கிறதென்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

Sunday, September 25, 2011

ஒளியை விட வேகமாக பயணிக்கமுடியும்: ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகியதா?


ஒளியை விட வேகமாக எதனாலும் பயணிக்க முடியாதெனும் அல்பர்ட் ஐன்ஸ்டினின் கோட்பாடான ‘Theory of Relativity’ யை விஞ்ஞானிகள் தவறென நிரூபித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்கள் ஒளியை விட வேகமாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளனர்.
ஒளி (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீட்டர்.
எனினும் அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை விட 60 நெனோசெக்கன்கள் வேகமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் ஆராய்ச்சியானது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் பௌதிகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகிவிடும்.

மனித பார்வைக்குள் சிக்காத புதுமையான உயிரினம் (காணொளி இணைப்பு)


உலகில் மனிதர்கள் அறியப்படாமல் பல உயிர்கள் உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறன.
இந்தக் காணொளில் காணப்படும் உயிரியும் அப்படியான ஒன்று தான். மார வாழ்க்கைக்கு ஏற்றது போல் உடல் அமைப்பு மற்றும் நகங்களை கொண்டிருந்தாலும் இது ஒரு ஊர்வன போலவே தரையில் தொழிற்படுகிறது.
பலருக்கு அச்சமூட்டும் வகையில் இருந்தாலும் அதை அணுகிய போது அது ஒரு சாதுவனது என்பதை உணர முடிகிறது.
இந்த விலங்கு ஒரு கரடி இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் பெயர் சொலாத் என்பதாகும். இது மிகவும் ஒரு சோம்பேறியான விலங்காகும்.

வீழ்ச்சியை நோக்கி உலகப் பொருளாதாரம்


அமெரிக்காவும், யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளும் மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சிக்குள் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது என சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். எச்சரித்துள்ளது.
பங்குச் சந்தை.



பங்குச் சந்தைகளிலும் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

அப்படியொரு பொருளாதார வீழ்ச்சி வருமானால் மற்ற நாடுகளும் அதனால் கணிசமான பாதிப்புகள் ஏற்படும் என்று அது கூறியுள்ளது.
உலக பொருளாதாரம் ஆபத்தானதொரு புதிய கட்டத்துக்குள் நுழைந்துள்ளது என்று ஐ.எம்.எஃப்.வெளியிட்டுள்ள புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்த நடவடிக்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.
வட்டி விகிதங்களைக் குறைக்க ஐரோப்பிய மத்திய வங்கி தயாராக வேண்டும் என அது தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் அவசர அவசரமாக நிதிக் குறைப்புகளை செய்யப்போய் அதனால் பொருளாதார நிலை மேலும் பலவீனமடைவதற்கான ஆபத்து இருக்கவே செய்வதாக ஐ.எம்.எஃப். அறிக்கை கூறுகிறது.

அளவ்வ ரயில் விபத்து: மூவர் பலி, 33 பேர் காயம்




இலங்கையில் இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் காயமடைந்துள்ளனர்
ரயில் சாரதி, உதவியாளர் மற்றும் வெளிநாட்டவர் பலி
ரயில் சாரதி, உதவியாளர் மற்றும் வெளிநாட்டவர் பலி
கொழும்பிலிருந்து பொல்காவலை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று அதே திசையில் கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொல்காவலை நோக்கிச் சென்ற ரயிலின் சாரதியும் அவரது உதவியாளரும் வெளிநாட்டவர் ஒருவருமே விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக ரயில்வே பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் குருநாகல் மாவட்டத்தில் அளவ்வ சந்தி என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கண்டி நோக்கிச் சென்ற ரயிலின் சுற்றுலாப் பயணிகளுக்கான பார்வையாளர் பெட்டி முற்றாக சேதமடைந்துள்ளதாக விபத்து நடந்த இடத்திலிருந்த ஊடகவியலாளர் பிபிசிக்குத் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் அளவ்வ மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயிலின் சேதமடைந்த பெட்டிகளுக்குள் பயணிகள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தொடர்வதாக சற்றுமுன்னர் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரக்கோணம் அருகே ரயில் விபத்து: பலி 9




விபத்துப் பகுதியில் மீட்புப்பணி
விபத்துப் பகுதியில் மீட்புப்பணி
தமிழ்நாட்டில் அரக்கோணம் அருகே செவ்வாய்க்கிழமை இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 86 பேர் காயடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், சித்தேரி அருகே சிக்னலுக்காகக் காத்திருந்தபோது, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் அதே பாதையில் சென்று பின்புறமாக மோதியது.
இதில், நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகளும், புறநகர் மின்சார ரயிலின் இரு பெட்டிகளும் கவிழந்துவிட்டன. அதனால், அந்த ரயில்களில் இருந்த பலர் படுகாயமடைந்தனர். இரவு ஒரு மணிவரை, 9 பேரின் சடலங்கள் மீ்ட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் பெண்கள் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த 86 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் படுகாயமடைந்திருப்பதாகத் தெரிகிறது.
மீட்புப்பணி பாதிப்பு
விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்வதால், மீட்புப்பணி சற்று நேரம் பாதிக்கப்பட்டதாக அங்கிருக்கும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து, நள்ளிரவு 12.30 மணியளவில் மீட்புப்பணிகள் நிறைவடைந்தன.
விபத்து காரணமாக, சென்னையிலிருந்து செல்ல வேண்டிய பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. விபத்து பற்றிய தகவல்களை அறிய, 91-44-25357398, 91-44-25347771 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நிவாரணம்
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரமும் வழங்கப்படு்ம் என்றும் அறிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், மனிதத் தவறாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இணையம் தோன்றி இருபது ஆண்டுகள்


இன்று நாம் எல்லோம் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றவோர்ல்ட் வைட் வெப்(www)எனப்படும் கணினி வலயத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒருவர் தொடங்கி இன்றோடு இருபது வருடங்கள் ஆகின்றன.
இணையம்
ஒரு கணிணியில் இருக்கின்ற தகவல்களை மற்ற கணினிகள் வழியாக பார்ப்பதற்கும் உலக அளவில் கணினி வலயமைப்பில் பகிர்ந்துகொள்வதற்குமான ஒரு எளிய முறையை பேராசிரியர் டிம் பர்னர்ஸ் லீஉருவாக்கியிருந்தார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்று ஒன்றுக்கு முன்பாக இண்டர்நெட் என்பது விஞ்ஞானிகள் தங்களுக்கு இடையில் தகவல் பரிமாறுவதற்கான ஒரு வழியாகவே இருந்துவந்தது.
வெவ்வேறு கணினிகள் வெவ்வேறு இயந்திர மொழியைப் பயன்படுத்தியதாலும் ஆவணங்கள் பல்வேறு கணிணி வடிவங்களில் இருந்ததாலும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது சிக்கலும் சிரமமும் நிறைந்த ஒன்றாக இருந்துவந்தது.
அச்சமயம் ஜெனீவாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தில் வேலைபார்த்து வந்த சர் டிம் பர்னர்ஸ் லீ, கணினிகள் தமக்கிடையில் எளிமையாக தகவல் பரிமாறுவதற்கான இணைய மொழியான HTMLஐ உருவாக்கினார்.
இணையத்தில் உள்ள ஒரு பக்கத்தை இன்னொரு பக்கத்துடன் எளிதில் இணைப்பதற்கு, அதாவது ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த ஆவணத்துக்கு சென்றுவிடலாம் என்ற முறையில் இணைப்பதற்கு, இந்த HTML வழிவகுத்தது.
மிகவும் சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாகத் தெரியும் இந்த கண்டுபிடிப்புதான் இன்று உலகத்தையே ஆட்கொண்டுள்ள இணையமாக வொர்ல்ட் வைட் வெப்பாக உருவெடுத்துள்ளது.
மூன்று மாத உழைப்பில் டிம் பர்னர்ஸ் லீ கண்டுபிடித்த அந்த இணையத்தை இன்று உலகின் முப்பது சதவீதமான மக்கள் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர்.

புகைப்பழக்கம்: பெண்களுக்கு ஆபத்து அதிகம்


புகைப் பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கின்ற பெண்களுக்கு இருதய நோய் வரக்கூடிய ஆபத்தானது அப்பழக்கத்தை ஆரம்பிக்கும் ஆண்களை விட அதிகமாக இருக்கிறது என முப்பது வருட ஆராய்ச்சிகளில் மீளாய்வு கூறுகிறது.
புகைப்பிடிக்கும் பெண்

இருபத்து நான்கு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்துப் பார்க்கையில் புகைக்கும் ஆண்களை விட புகைக்கும் பெண்களுக்கு இருதய நோய் ஆபத்து 25 சதவீதம் கூடுதலாக இருப்பதாக லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிக ஆபத்து வருவது ஏன் என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
சாதாரணமாக ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலான சிகரெட்டுகளைத்தான் பிடிக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கு இருதய நோய் ஆபத்து அதிகம் என்ற கண்டுபிடிப்பு ஒரு எச்சரிக்கையாக வந்துள்ளது என பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் என்ற இருதய நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உலகில் அதிகம் பேரைக் கொல்லும் நோய் இருதய நோய்தான் என்றும் ஒவ்வொரு ஆண்டும் இந்நோயின் காரணமாக ஏழுபது லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆண் பெண் என இருபாலாரிலுமே புகைப்பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில் புகைப்பவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு கிளம்பின நாஸாவின் செயற்கைக்கோள்கள்


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிலவுக்கான விண்வெளிக் கலம் இரண்டு நாள் தாமதத்துக்குப் பின் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

பிறை



புளோரிடாவின் கேப் கனவ்ரெல் என்ற இடத்திலிருந்து கிளம்பிய டெல்டா டூ என்ற ரொக்கெட், ஒரே மாதிரியான இரண்டு செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்கிறது.
இவை நிலவின் ஈர்ப்பு வெளியை இதற்கு முன்பில்லாத வகையில் ஆழமாக ஆராயும்.
கிராவிட்டி ரெகவரி அண்ட் இண்டீரியர் லெபாரெட்டரி சுருக்கமாககிரெய்ல் என்று சொல்லப்படும் இந்த நிலவுப் பயணம் நிலாவின் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களைக் கண்டறியும் என்று தாங்கள் நம்புவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நிலவு எப்படி உருவானது, நிலவில் பூமியைப் பார்த்தபடி இருக்கும் பக்கம் வழவழப்பாகத் உள்ள அதேநேரத்தில் பூமியின் பார்வையில் இருந்து மறைந்திருக்கும் மற்ற பக்கம் மிகவும் கரடுமுரடாக இருப்பது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண இந்தப் பயணம் உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு சூரியன்களைச் சுற்றிவரும் கோள்




ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டிருக்கும் இரண்டு சூரியன்களையும் அந்த இரண்டு சூரியன்களையும் சுற்றிவரக்கூடிய கோள் ஒன்றையும் நாஸாவின் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
ஓவியரின் கைவண்ணத்தில் இரு நட்சத்திரங்களும் கோளும்








ஓவியரின் கைவண்ணத்தில் இரு நட்சத்திரங்களும் கோளும்

கெப்லர் 16பி என்று இந்த கோளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த கோள் இரண்டு நட்சத்திரங்களையும் சுற்றிவர 229 தினங்களை எடுத்துக்கொள்கிறதாம்.
இக்கோள் வாயுக்கள் நிரம்பிய ஒரு பெரிய கிரகமாகும். அதன் மேல் மட்டத்தில் -73 பாகை செல்ஷியஸ் முதல் -101 பாகை செல்ஷியஸ் வரையிலான கடும் குளிர் இருக்குமாம்.
இந்தக் கிரகத்துக்கு ஒளி வழங்கும் ஆதாரம் இரண்டுமே ஒன்றுக்கொன்று அருகில் இருப்பதால் இந்தக் கிரகம் எந்நேரமும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.
உயிர்கள் வாழ்வதற்குரிய அம்சங்கள் இந்தக் கோளத்தில் இல்லை.

ஆனாலும் இப்படி ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வானியல் ஆராய்ச்சியாளர்களிடையேயும் 
ரசிகர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.
   

மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய தவளை இனங்கள்




இந்தியாவில் இதுவரை கண்டறியப்படாத 12 புதிய வகை தவளையினங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வயநாடு தவளை
இரவில் வேட்டையாடும் இந்த தவளையினம் கிரிக்கெட் பந்து அளவுக்கு வளருமாம்.

தவிர அழிந்துவிட்டதாக கருதப்பட்டு வந்த வேறு 3 தவளையினங்களையும் இவர்கள் மறுபடியும் கண்டுபிடித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தவளையினங்கள் மிகவும் அரிதானவை என தவளை ஆராய்ச்சிக்கு தலைமையேற்றிருந்த விஞ்ஞானி சத்யபாமா பிஜு கூறினார்.
பூனை போல 'மியோவ்' என்று ஒலியெழுப்பக்கூடிய இரவில் வேட்டையாடும் தவளையினம், ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு வளரக்கூடிய கேரளத்தின் வயநாடு பகுதியில் காணப்படும் இரவில் வேட்டையாடும் தவளையினம் உள்ளிட்டவை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தவளையினங்களில் அடங்கும்.
ஸுடாக்ஸா (Zootaxa) என்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.

“மின்தூண்டுதல் மூளைத்திறனை அதிகரிக்கும்”




மின்காந்தப்புலத்தில் மனித மூளை






மின்சாரத்தின் உதவியுடன் மனித மூளையை தூண்டச்செய்து அதன் மூலம் ஒருவரின் கற்கும் திறனை அதிகப்படுத்தலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த விஞ்ஞானிகள் செய்திருக்கும் ஆய்வில், மனித மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில், குறைந்த அளவு மின்காந்தப்புல தூண்டுதலை குறிப்பிட்ட கால கட்டத்திற்கு செலுத்துவதன் மூலம் மூளையின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும், அதன் மூலம் ஒருவரது கற்கும் திறனை-- குறிப்பாக ஒருவரின் கற்கும் வேகத்தை அதிகப்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆரோக்கியமான மனிதர்களின் மூளை மற்றும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையின் செயற்பாடுகள் இந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் மூளையின் செயற்பாடுகளை கூர்மையாக ஆராய்ந்த இவர்களுக்கு மனித மூளையின் நெகிழ்வுத்தன்மை பெரிய வியப்பை தந்தது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனித மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகள் உரிய மருத்துவ சிகிச்சைக்குப்பிறகு தனது முந்தைய செயற்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் செயற்படுத்தத் துவங்கும் விதத்தை இவர்கள் விரிவாக ஆராய்ந்தனர்.
அப்படியான மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் செயற்பட வைப்பதற்காக அந்த பகுதிகளுக்கு குறைந்த அளவான மின்காந்தப்புலத்தை, உரிய உபகரணங்களை கொண்டு செலுத்தும் சிகிச்சை முறையை இவர்கள் கண்காணித்தனர்.
இந்த குறிப்பிட்ட சிகிச்சை முறையை ஆரோக்கியமான மனிதர்களின் மூளையில் செய்தபோது விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது அப்படி செலுத்தப்பட்ட மூளையின் குறிப்பிட்ட பகுதியின் செயற்பாட்டின் வேகம் அதிகரித்ததை கவனித்த விஞ்ஞானிகள், மனிதர்களின் கற்றல் திறனை கட்டுப்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் இந்த பரிசோதனையை செய்தபோது அப்படிப்பட்டவர்களின் கற்கும் வேகம் அதிகரிப்பதை இவர்கள் கண்டறிந்தனர்.
இதன் மூலம், கட்டுப்படுத்தப்பட்ட மின்காந்த தூண்டுதலால் மனித மூளையின் செயற்திறனை அதிகரிக்கச்செய்ய முடியும் என்பதை தங்கள் பரிசோதனையின் முதல்கட்ட முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் மேலதிக பரிசோதனைகளின் முடிவில், மூளையின் செயற்திறனை, குறிப்பாக கற்கும் திறனை அதிகரிக்கச்செய்யும் மின் காந்த கருவி ஒன்றை உருவாக்க முடியும் என்றும் இவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
அப்படியானதொரு கருவி விளையாட்டு வீரர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படக்கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்: வியப்பில் விஞ்ஞானிகள்



ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்: வியப்பில் விஞ்ஞானிகள்

ஒளியின் வேகமே பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகம் என்று நம்பப்படுகிறது
ஒளியின் வேகமே பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகம் என்று நம்பப்படுகிறது
ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.
தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.

ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம்

ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.
பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.
இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.

பரிசோதனை

ஆனால் தற்போது சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ்க கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின.
தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன.
தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இவர்களால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

ஆராய்ச்சியில் பிழை கண்டுபிடிக்க கோரிக்கை

ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து, தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போதைய பரிசோதனையின் முடிவுகளை இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் உறுதிசெய்யுமானால், நமது பொதீக அறிவை என்றென்றும் மாற்றிய ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம்


பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.
முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.
விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக இவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்யவுள்ளார்கள்.
முகத்திரையை நீக்க மறுத்த காரணத்துக்காக ஹைண்ட் அஹமாஸ் மற்றும் நஜத் அலி ஆகிய 
இருவருக்கும் இன்று முறையே 120 மற்றும் 80 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கான மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுடன், ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்திலேயே இறுதி முடிவும் எடுக்கப்படும்.
முழுமையான முதத்திரையை அணிவது என்ற தனது முடிவு சுயமானது என்று கூறுகின்ற ஹைண்ட் அஹமாஸ் அவர்கள், முகத்திரைக்கான தடை கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்த பின்னர், தனக்கு வங்கிகள், கடைகள் அல்லது பஸ்கள் என அனைத்து பொது இடங்களிலும் தடை விதிக்கப்பட்டதாகவும், குறைந்த பட்சம் ஒரு தடவைக்கு மேல் வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் தான் தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
இஸ்லாமிய விதிகளின் படி முழுமையான முகத்திரை கட்டாயமானதல்ல என்பதுடன், இது குறித்த விவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்கிடையிலேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.


இந்தத் தடை குறித்து பெரும் சர்ச்சை நிலவுகின்ற போதிலும், நூற்றுக்கும் குறைவான முகத்திரை அணிந்த பெண்களே இதற்காக வீதிகளில் தடுக்கப்பட்டதுடன், பத்துக்கும் குறைவான பெண்களே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெல்ஜியம், இத்தாலி, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களிலும் ஒன்றில் இதே போன்ற தடை ஏற்கனவே கொண்டு வரப்பட்டு விட்டது அல்லது கொண்டுவரப்படுகின்றது.
இன்றைய இந்த தீர்ப்பு இந்த அனைத்து நாடுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

மனிதனுக்கு வணங்காத சுயமரியாதை மார்க்கம்!



இஸ்லாம் அறிவு புர்வமான மார்க்கம்அதன் வழிகாட்டுதல்கள்அற்புதமானவைபடைத்த இறைவன்இறைவன் தான்அவனால்படைக்கப்பட்ட மனிதன்மனிதன் தான்மனிதன் கடவுளாகி விட முடியாது.கடவுள் மனிதனாக முடியாதுதன்னால் படைக்கப்பட்ட எந்த மனிதனும்தன்னைத் தவிர வேறு எந்த படைப்பினத்திற்கும் தலை வணங்கக் கூடாது.அந்தச் சாயல் கூட ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் இஸ்லாம் கண்ணும்கருத்துமாக இருக்கிறதுஅது போல் எந்த மனிதனும்  எந்த மனிதனுக்கும்தலை வணங்கக் கூடாதுஅந்தச் சாயல் கூட ஏற்பட்டு விடக் கூடாதுஎன்பதிலும் கவனமாகவே இருக்கிறதுஅந்த வகையில் மரியாதைக்காக ஒருமனிதன் வேறொரு மனிதனுக்கு எழுந்து நிற்பதையும் தடை செய்கிறது.
சுயமரியாதையை தகா்த்தெறியும் ‘எழுந்து நிற்றல்’ எனும் இவ்வணக்கம்இன்று சா்வ சாதாரணமாக சமுதாய மன்றத்தில் பரவலாக அரங்கேறிவருவதனை காண முடிகிறதுஇவ்வகையில்
·             ஆசிரியருக்காக மாணவன் எழுந்து நிற்றல்.
·             மூத்தவா்களுக்காக இளையவா்கள் எழுந்து நிற்றல்.
·             ஜனாதிபதிக்காக மக்களும் மந்திரிகளும் எழுந்து நிற்றல்.
·             முதலாளிக்காக தொழிலாளி எழுந்து நிற்றல்.
·             பள்ளி நிர்வாகிகளுக்கு முன் கதீப் எழுந்து நிற்றல்.
·             மார்க்க அறிஞனுக்காக மக்கள் எழுந்து நிற்றல்.
·             தேசிய கொடி ,தேசிய கீதம் மற்றும் குத்து விளக்குஏற்றும் போதுவருகை தந்திருப்போர் எழுந்து நிற்றல்  போன்ற வற்றை குறிப்பிடமுடியும்.
எழுந்து நிற்றலை இஸ்லாம் ஏன் தடுக்கிறது?
ஒருவன் மரியாதைஅச்சம்அன்பு போன்ற உணா்வுகளால் உந்தப் பட்டுஇன்னொருவா் முன்னிலையில் எழுந்து நிற்றல்குனிதல்தலை சாய்த்தல்போன்றன வணக்கமாகக் கருதப்படுகின்றனவணக்கங்கள் யாவும்அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே நிறைவேற்றப் படல் வேண்டும்.
தொழுகையை குறிப்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் கியாம்’ ‘நிற்றல்என்ற பொருள் தரக்கூடிய அரபுச் சொல் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது.அல்லாஹ்வுக்காக கட்டுப்பட்டு நில்லுங்கள்’ (2:238),‘இரவில் குறைவானநேரம் தவிர நின்று வணங்குவீராக!’ (73:2),‘யார் ரமழானில் ஈமானோடும்நன்மையை எதிர்ப் பார்த்தும் நிற்கிறாரோ அவருடைய முன்பாவங்கள்மன்னிக்கப்பட்டு விடுகிறது.’ (புகாரி - முஸ்லிம்).
மேற்படி வசனங்கள் யாவும் நிற்றல் என்பதனை வணக்கம் என்றுகுறிப்பிட்டிருப்பதனை எம்மால் அவதானிக்க முடிகிறதுஎனவேஎப்படிஸஜ்தாவை(தலை சாய்த்தலை) அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும்செய்யக் கூடாதோஎப்படி ருகூஃவை (குனிதலை) அல்லாஹ்வைத் தவிரஏனையோருக்கு செய்ய முடியாதோஅதே போன்று மரியாதையின் நிமித்தம்எழுந்து நிற்பதை (கியாமை)யும் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும்செய்யக் கூடாது.
நபி (ஸல்அவா்கள் மரியாதை நிமித்தம் பிறருக்காக எழுந்து நிற்பதை தடைசெய்திருப்பதிலிருந்தும் எழுந்து நிற்பதும் ஒரு வணக்கமே என்பதை நாம்விளங்கிக் கொள்ளலாம்.
தடைக்கான ஆதாரங்கள்:
மரியாதைக்காக எழுந்து நிற்பது என்பது இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டும் என்பதால் தான் நபி (ஸல்அவா்கள் எழுந்து நிற்பதை விரும்பக்கூடியவா்களையும்எழுந்து நின்ற மக்களையும் அவ்வாறு செய்யக் கூடாதுஎன்று தடை செய்திருப்பதை பல சந்தா்ப்பங்களில் காண முடிகிறது.
01) ஒரு முறை நபி (ஸல்அவா்கள் நோய்வாய்ப் பட்டார்கள்அப்போதுஅவா்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள்நாங்கள்அவா்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம்அபுபக்கா் (ரழிஅவா்கள்நபி (ஸல்அவா்களின் தக்பீரை (அல்லாஹூ அக்பா் எனக்கூறி)செவியுறச் செய்வார்கள்நபியவா்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள்நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள்சைகை மூலம் எங்களைஉட்காரச் சொன்னார்கள்நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவா்களைப்பின்பற்றித் தொழுதோம்தொழுகையை முடித்தவுடன் “பாரசீகரோமாபுரி  மன்னா்கள் அமா்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்றசெயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களேஇனிமேல் அவ்வாறுசெய்யாதீர்கள்உங்கள் தலைவா்களைப் பின்பற்றித் தொழுங்கள்.அவா்கள் நின்று தொழுகை நடாத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்.அவா்கள் உட்கார்ந்து தொழுகை நடாத்தினால் நீங்களும் உட்கார்ந்துதொழுங்கள்” என்று கூறினார்கள்.
முஸ்லிம்: 701, புகாரி: 688, 689, 732, 733, 805, 1114
மேற்படி ஹதீஸின் மூலம் நாம் ஓர் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது.நபியவா்கள் தனக்கு உடல் உபாதை ஏற்பட்டதனால் தான் அமா்ந்துதொழுதார்கள்பின்னால் மஃமூன்களாக தொழுத ஸஹாபாக்கள் நின்றுதொழும் அளவுக்கு உடல் நலத்துடன் தான் இருந்தனா்அவா்கள்நோய்வாய்ப்பட்டிருக்க வில்லைமேலும்அவா்கள் நபியவா்களை மரியாதைசெய்ய வேண்டுமே என்பதற்காக நின்று தொழுவும் இல்லைஆனாலும்,நபியவா்கள் இதனை தவறு என்று ஏன் தடுத்தார்கள்முன்னால் நபியவா்கள்அமா்ந்திருக்க பின்னால் மற்றவா்கள் நின்று தொழுவதை ஒருவா் பார்க்கும்போது நபி (ஸல்அவா்களின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காகநிற்பது போன்றதோர்  தோற்றம் ஏற்படுகிறதுஏனைய நாட்டு மன்னா்களுக்குமுன் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வது போல் இதுவும் தோற்றம்அளிக்கிறதுமனிதனை மனிதன் வணங்கும் இந்த மரியாதை வாடை கூடதம்மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறுநபியவா்கள் ஆணையிடுகிறார்கள்.
02) உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமானஒருவரும் இருந்ததில்லைஎன்றாலும் அவா்கள் எங்களை நோக்கி வரும்போது நாங்கள் அவா்களுக்காக எழ மாட்டோம்இதை அவா்கள்கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
திர்மிதி: 2678, அஹ்மத்: 12068, 11895
தமது உயிரை விட மேலாக நேசிக்கப்பட்ட நபிகளார் வரும் போதே நாங்கள்அவருக்காக எழுந்திருக்க மாட்டோம் எனும் போது ஆன்மீக பெறுமானமற்றவெற்று அமீர்மார்களுக்காகவும்சாதாரண ஆசான்களுக்காகவும் எப்படி ஒருமுஸ்லிம் எழுந்து நிற்க முடியும்?
03) நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தின் ஐந்தாவதுஅதிபதியாகத் திகழ்ந்த முஆவியா (ரலிஅவா்கள் வெளியே வந்த போது,அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸூபைர் அவா்களும்இப்னுஸஃப்வான் அவா்களும் எழுந்து நின்றனா்உடனே முஆவியா (ரலி)அவா்கள் “நீங்கள் இருவரும் அமருங்கள்!” என்றார். (ஏனெனில்) ‘தனக்காகமக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவா் தனதுதங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்’ என்று முஆவியா(ரலிசொன்னார்கள்.
அபுதாவுத்: 4552 (கிதாபுல் அதப் - 165வது பாப்)
தனது வருகையின் போது அமா்ந்திருப்பவா் எழுந்து நிற்க வேண்டும் என்றுநினைப்பதே அம்மனிதரை நரகத்தில் கொண்டு போய் சோ்க்கும் என்றால்,பாடசாலைகளில் மாணவா்கள் தனக்காக எழ வேண்டும் என்று நினைப்பதுமட்டுமில்லாதுஅதை சட்டமாக ஆக்கியுள்ள அதிபா்களினதும்,ஆசிரியா்களினதும் மறுமை நிலை என்னநபிகளாரை விட நாம்எவ்வகையிலும் உயா்ந்தவா்கள் கிடையாது என்றிருக்கஅம்மாமனிதரேதனக்காக எழுவதை தடுத்திருக்கும் போது நாம் எம்மாத்திரம் என்பதைசம்பந்தப்பட்டவா்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
எழுந்து மரியாதை செய்ய முடியும் என்போரின் ஆதாரங்களும் அதற்கானதெளிவுகளும்:
01) ‘குரைலா கூட்டத்தினா் ஸஃத் பின் முஆத் (ரலிஅவா்களின் தீர்ப்பைஏற்க முன்வந்தனா்அப்போது ஸஃத் (ரலிஅவா்களை நபி (ஸல்அவா்கள்(அழைத்து வரும்படி ஒருவரைஅனுப்பினார்கள்ஸஃத் (ரலிஅவா்கள்நபி (ஸல்அவா்களை சந்திக்க வந்த போது நபி (ஸல்அவா்கள்அன்ஸாரிகளிடம் உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள்என்றோ,அல்லது உங்களின் சிறந்தவரின் பால் எழுந்துசெல்லுங்கள்என்றோ கூறினார்கள். (அழைத்து வரப்பட்டவுடன்)அவர்கள் நபி (ஸல்அவா்களின் பக்கத்தில் அமா்ந்தார்கள். “இக்கூட்டத்தினா் உமது தீர்ப்பை ஏற்கவந்துள்ளனா். (நீர் என்ன செய்யப்போகிறீர்?)”என நபி (ஸல்கூறினார்கள்.“அவா்களில் போர் செய்யக்கூடியவா்கள் கொலை செய்யப்படுவார்கள்அவா்களின் சந்ததிகள்சிறைபிடிக்கப் படுவார்கள் என நான் தீர்ப்பளிப்பேன்” என்று ஸஃத் (ரலி)கூறிய போது “நீர் வானவா் செய்த முடிவை செய்துள்ளீர்” என நபி (ஸல்)கூறினார்கள்.
அறிவிப்பவா் : அபுஸயீதுல் குத்ரி (ரலி)  நூல் : புகாரி - 6262, 4121 
இந்நபி மொழியை சான்றாக வைத்துதம்மை விட பதவியில் - அந்தஸ்தில்உயா்ந்தவா்கள் முன்னிலையில் எழுந்து நிற்களாம் என்று சிலா்வாதிக்கின்றனா்ஆனால்இவா்களது இவ்வாதம் தவறானதாகும்இந்தஹதீஸில் கூமூ இலா செய்யிதிகும் என்ற வாசக அமைப்புத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதுஇதன் பொருள் உங்கள் தலைவரின் பால் எழுந்துசெல்லுங்கள்என்பதாகும்தலைவருக்காக எழுந்து நிற்பது என்பது வேறு.தலைவரின் பால் எழுந்து செல்வது என்பது வேறு. ‘தலைவருக்காக எழுந்துநில்லுங்கள் என்று கூறுவதாயின் கூமூ லிசெய்யிதிகும் என்று தான்வாசக அமைப்பு வந்திருக்க வேண்டும்எனவேஇவ்வாசக அமைப்பிலிருந்துஇவா்கள் சொல்லும் கருத்து இதில் இல்லை என்பது தெளிவாகிறது.
அத்தோடுஸஹாபாக்கள் அவருக்கு மரியாதை செய்யும் நோக்கில்  எழுந்துநிற்க வில்லை என்பதும்அவருக்கு உதவி செய்வதற்காகவே எழுந்துசென்றார்கள் என்பதும் பின்வரும் செய்தியிலிருந்து அறிய முடிகிறது.
ஸஃத் (ரலிஅவா்கள் கந்தக் போரில் காயப்பட்டார்கள்அதன் சிலதினங்களுக்குப் பிறகு தான் நபியவா்களை சந்திக்க வாகனத்தில் ஏறி அவா்வந்துள்ளார்ஏறி வந்தவருக்கு உதவி செய்யும் பொருட்டு ‘தலைவரின் பால்எழுந்து செல்லுங்கள்’ என்றே நபியவா்கள் கூறினார்கள்.
நபி (ஸல்அவர்கள் ஸஃத் (ரலிஅவா்களை கண்ட போது உங்களுடையதலைவரை நோக்கி எழுந்து சென்று அவரை (வாகனத்திலிருந்துஇறக்கிவிடுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவா் : ஆயிஷா (ரலி)   நூல் : அஹ்மத் - 23945, புகாரி
இதிலிருந்து காயம் காரணமாக அவதிப்பட்டவரை வாகனத்திலிருந்து இறக்கிவிடுவதற்காகவே எழுந்து செல்லுமாறு நபியவா்கள் கூறினார்கள் என்பதும்,மரியாதை செய்யும் நிமித்தம் அவருக்காக எழுந்து நில்லுங்கள் என்றஅர்த்தத்தில் கூறவில்லை என்பதும் வௌ்ளிடை மலை.
எழுந்து நிற்க அனுமதிக்கப்பட்ட சந்தா்ப்பங்கள்:
01)பிறரை வரவேற்பதற்காக எழுந்து செல்லல்
எமது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் உள்ளிட்டோரை வரவேற்பதற்காகஎழுந்து செல்வது கூடும்இது அவா்களாக எழுந்து நிற்பது கிடையாது.இவ்விரண்டுக்குமிடையில் வித்தியாசம் உள்ளதுஒருவருக்காக அவா் வரும்போது எழுந்து நிற்றல் என்பது அவனைப் பெருமைப் படுத்துவதும்,அவனைவிட தான் தாழ்ந்தவன் என்று மறைமுகமாக உணா்த்துவதும்ஆகும்ஏனென்றால்இவா்கள் யாருக்காக எழுந்து நிற்கிறார்களோ அவா் இவா்களுக்காக எழ மாட்டார்ஆனால்ஒருவரை நோக்கி எழுந்து செல்லுதல்என்பது அவா் மீது நாம் கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதாகும்.மேலும்அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்செல்வதாகும்.
ஆதாரம்: 01
நபி (ஸல்அவா்களின் அமைப்பிலும் போக்கிலும்நடத்தையிலும்ஒத்தவராக ஃபாத்திமா (ரலிஅவா்களை விட வேறு யாரையும் நான்பார்த்ததில்லைபாதிமா (ரலிஅவா்கள் நபி (ஸல்அவா்களிடத்திலேவரும் போது நபியவா்கள் பாதிமாவை நோக்கி எழுந்து சென்றுஅவா்களுடைய கையிலே முத்தமிட்டு அவா்களைத் தன்னுடையஇடத்திலேயே அமர வைப்பார்கள்பாதிமா (ரலிஅவா்களும் நபி (ஸல்)அவா்கள் தன்னிடத்திலே வரும் போது அவா்களை நோக்கி எழுந்துசென்று அவா்களுடைய கையிலே முத்தமிட்டு அவா்களைத் தன்னுடையஇடத்தில் உட்கார வைப்பார்கள்.  (திர்மிதி - 3807)
நபியவா்கள்பாதிமா (ரலிஅவா்கள்  தன்னுடைய வீட்டிற்கு வரும் போதுஎவ்வாறு நடந்து கொள்வார்களோ அதே போன்று தான் பாதிமா (ரலி)அவா்களும் நபி (ஸல்அவா்கள் தன்னுடைய வீட்டிற்கு வரும் போது நடந்துகாட்டியுள்ளார்கள்இதிலிருந்துஎன் வீட்டிற்கு நீங்கள் வரும் போது நான்எழலாம்அது போல் உங்கள் வீட்டிற்கு நான் வரும் போது நீங்கள் எழவேண்டும்இதற்குப் பெயா் தான் வரவேற்புஎன் வீட்டிற்கு நீங்கள் வந்தால்நான் எழும் நிலையில்உங்கள் வீட்டிற்கு நான் வரும் போது நீங்கள் எழாமல்இருந்தால் நான் மரியாதைக்காகவே  எழுந்ததாக ஆகும்.
ஆதாரம்: 02
கஅப் பின் மாலிக் (ரலிகூறினார்கள்:
(நான் தபுக் போரில் பங்கேற்காமல் இருந்த விவகாரத்தில் எனக்குமன்னிப்பளித்து இறை வசனம் அருளப்பட்ட பின்நான் (மஸ்ஜிதுந் நபவீ)பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன்அங்கே அல்லாஹ்வின் தூதா் (ஸல்)அவா்கள் இருந்தார்கள்அப்பொழுது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)அவா்கள் விரைந்தோடி வந்து என் கரத்தைப் பற்றி எனக்கு வாழ்த்துச்சொன்னார்கள். - புகாரி - 4418
இங்கு தல்ஹா ஓடி வந்தது மரியாதைக்காக அல்லஅத்தோடுதல்ஹாமட்டும் தான் ஓடி வந்தார்நபியவா்களோஏனைய நபித்தோழா்களோஅவருக்காக எழுந்திருக்க வில்லை.
02)உதவி செய்வதற்காக எழுந்து செல்லுதல்
ஒருவருக்கு உதவி செய்யும் நோக்கில் எழுந்து செல்வதும்எழுந்து இடம்கொடுப்பதும் அனுமதிக்கப்பட்டதே.
ஆதாரம் :
ஸஃத் பின் முஆத் (ரலிஅவா்கள் நபி (ஸல்அவா்களை சந்திக்க வந்தபோது உங்களுடைய தலைவரை நோக்கி எழுந்து சென்று அவரை(வாகனத்திலிருந்துஇறக்கி விடுங்கள் என்று நபியவா்கள் கூறினார்கள்.
அஹ்மத் - 23945
03)ஜனாஸாவிற்காக எழுந்து நிற்றல்
ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து போகும் வரை எழுந்துநில்லுங்கள் என்று அல்லாஹ்வின் தூதா் (ஸல்அவா்கள் கூறினார்கள்.அறிவிப்பவா் : ஆமின் பின் ரபீஆ,      நூல் : புகாரி-1311
ஜனாஸாவிற்காக நிற்கும் பொழுது அதற்கு பெருமையோஅகம்பாவமோஏற்படுவதில்லைஆனால் உயிரோடுள்ள மனிதா்களுக்காக நிற்கும் போதுஅது அவா்களை பெருமைஅகம்பாவம் கொண்டவா்களாக மாற்றுகிறது.
சுயமரியாதைக்கு வேட்டு வைக்கும் எழுந்து நிற்றல் எனும்வணக்கத்தினை மனிதனுக்கு புரியாமல் படைத்த இறைவனுக்கு மட்டும்செய்து ஈருலகிளும் வெற்றி பெற அல்லாஹ் அனைவருக்கும் அருள்புரிவானாக!