Monday, October 31, 2011

விளையாட்டு


ஹம்பாந்தோட்டை மாநகரில் இடம்பெற்ற தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழாவில் முக்கிய நிகழ்வான கடற்கரை காற்பந்தாட்ட போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
எஸ்.எம்.நுபைஸ் மற்றும் ஏ.என்.முஜாஹித்
10.10.2011 அன்று ஹம்பாந்தோட்டை மாநகரில் இடம்பெற்ற தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழாவில் முக்கிய நிகழ்வான கடற்கரை காற்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில்


இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எதிர்த்தாடியது.



இந்த மாபெரும் இறுதிப் போட்டியை பொறுத்தவரை மருதமுனை மக்களுக்கு மிகவும் முக்கிய ஒரு நிகழ்வாக இருந்தது.

ஏனெனில் இலங்கை அணியில் மருதமுனையைச் சேர்ந்த துடிப்பான இரண்டு இளைஞர்கள் விளையாடியதன் காரணத்தினால்தான்.



அதாவது இலங்கையணியில் மருதமுனை கோல்ட்மைன்ட் கழகத்தைச் சேர்ந்த எஸ்.எம்.நுபைஸ் மற்றும் ஏ.என்.முஜாஹித் என்ற இரண்டு

இளைஞர்கள் விளையாடினார்கள்.


இவர்கள் இருவரும் அணிக்கு மிகச் சிறந்த பங்களிப்பையும் வழங்கி நாட்டுக்கும் ஊருக்கும் புகழ்தேடித்தந்தார்கள்.இந்த தொடரில் 
நுபைஸ் மொத்தமாக 05 கோல்கள் போட்டு அசத்தினார்.

இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

09 க்கு 09 என்ற கோல் கணக்கில் வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்தது. இதில் நுபைஸ் அவர்கள் சிறப்பான 02 கோல்கள் போட்டார்.

பின்னர் தண்டனை உதைமூலம் வெற்றி தோல்வி யாருக்கு என்று தீர்மானித்ததில் 02 க்கு 00 என்ற கோல் கணக்கில்
பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் தங்கபதக்கத்தை பங்களாதேஷ் அணி பெற்றுக் கொள்ள வெள்ளிப் பதக்கம் இலங்கை வசமானது.

மருதமுனையில் இவர்கள் இருவருக்கும் வரவேற்பும் ஊர்வலமும்
ஏற்பாடு செய்யப்பட்டது.

மயிரிழையில் தங்கத்தை இழந்தாலும் இலங்கையைப் பொறுத்தவரை வெள்ளிப் பதக்கம் பெற்றதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது
ஏனெனில் இவர்களைப் போன்றே சிறப்பாக விளையாடக் கூடிய மருதமுனையைச் சேர்ந்த ரி.எம்.சாமில் மற்றும் ஆர்.றிஸாப்
என்ற இரண்டு இளைஞர்களுக்கும் துரதிஷ்டவசமாக உத்தேச அணியில் இடம் கிடைக்கவில்லை.கிடைத்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக
அமைந்திருக்கலாம் என விளையாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.