Tuesday, October 18, 2011

அரேபியன் பிளவு


http://apod.nasa.gov/apod/image/0210/rille_apollo10.jpg
அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.(திருக்குர்ஆன் 54:1)
இவ்வசனத்தில் சந்திரன்
பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன்
(மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது
சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக
மாறிற்று . அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள்
சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்
இப்னு மஸ்வூத்(ரலி)
நூல் : புகாரி 3636,4864,4865.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர்
என்று கூறிய போது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை இரண்டாகப்பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும்
மக்களிடம் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியைத் தான் இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.
பூமியின் துணைக் கோளாக அமைந்துள்ள
சந்திரனைப்பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள்,
சந்திரன் இரண்டாகப் பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது
என்று கருதலாம்.
ஆனால் திருக்குர்ஆனில் இறைவன் தனது தனிப் பெரும் ஆற்றலால்
நிகழ்த்திய அற்புதங்களைக் கூறும்
போது, அதற்கான சான்றுகளையும் உலகில் விட்டு வைக்கிறான்.
சந்திரன் பிளந்த நிகழ்வு தந்திரமோ அல்லது கண்கட்டு வித்தையோ அல்ல. அது
பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.
நிலவில் முதலில்
காலடியெடுத்து வைத்த
நீல்ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கியபோது அவர் பயணித்த விண்கலம்
நிலவைப் பல கோணங்களில் ஏராளமான
புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.
அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்
பட்ட புகைப்படங்களில்
ஓர் ஆப்பிளை இரண்டாக
அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.
இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால்
கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம்,
சந்திரன் பிளந்தது என்ற
நம்பிக்கை அரபியரிடம்
(முஸ்லிம்களிடம்) இருந்தது தான்.
முஸ்லிம்களின்
நம்பிக்கையை உறுதிப்படுத்தும்விதமாக
இந்தப்பிளவு அமைந்துள்ளது என்பதே
இதன் பொருளாகும்.
இறைவன் கூறுவது போன்று, சந்திரன்
பிளந்ததற்கான ஆதாரம்
சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக்
கண்டுபிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம் .
இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ்
உட்பட உலகின் பல மொழிகளில்
வெளியிடப்பட்ட அமெரிக்கன்
ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட
ஆதாரங்களுடன் வெளிவந்தது. அந்த
புகைப்படங்கள்:
http://i101.photobucket.com/albums/m77/fed0ra/moon-split-NASA.jpg
http://www.islam-watch.org/Assets/islam-quran-miracle-muhammad-spit-moon.jpg
சந்திரன் பிளந்தது பற்றியும், அதற்கான சான்று சந்திரனில்
பதிவாகியுள்ளது பற்றியும் திருக்குர்ஆன்
அறிவித்திருப்பது இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.