மருதமுனைக்கு வந்த சோகமும் மறக்க முடியாத வேதனையும்
P.M.M.A. காதர்
உலகில் பிறக்கின்ற எல்லோருமே ஒரு நாள் மரணித்தே ஆக வேண்டும் என்பது இயற்கையின் நியதியாகும். ஆனாலும் மரணம் சம்பவிக்கும் நிலையை வைத்தே திருப்தியும், துயரமும் அடைகின்றோம்.
ஆனால் விபத்துக்களிலும், இயற்கை அனர்த்தங்களிலும் மரணம் ஏற்படும் போது உறவுகளுககும், தேச உள்ளங்களுக்கும் அதிகமான வலியையும், துயரத்தையும் ஏற்படுத்துகின்றது.
ஆனால் விபத்துக்களிலும், இயற்கை அனர்த்தங்களிலும் மரணம் ஏற்படும் போது உறவுகளுககும், தேச உள்ளங்களுக்கும் அதிகமான வலியையும், துயரத்தையும் ஏற்படுத்துகின்றது.
ஊரே அழுது புலம்பும் ஒரு சோக சம்பவம் கடந்த 2011.04.29ம் திகதி மருதமுனை மக்களைத்தேடி வந்தது. இந்த சோகம் இன்று வரை மருதமுனையை விட்டு அகலவில்லை.
அந்த சோகத்திலிருந்து நானும் விடுபடிமுயாத நிலையில் இருந்து கொண்டு இக்கட்டுரையை எழுதினேன். மருதமுனைக்கு மறக்கமுடியாத பல சோகங்கள் சொந்தமாகி இருக்கின்றன அதில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த வகையிலே விபத்துக்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் கடந்த 29ம் திகதி மன்னம்பிட்டியை அண்டிய பிரதேசமான கொட்டலிய என்ற இடத்pலுள்ள சிறிய பாலமொன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்ற ஆறு உயிர்களை பலி கொண்டிருக்கிறது.
இந்த இடத்திலே அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்றுவருவது தொடர்கதையாக நாங்கள் அறிந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இதைப்பற்றி அரசாங்கமோ, அரசியல் வாதிகளோ இந்தப்பாலத்தை அகலமாக்குவதற்கோ பாதுகாப்பான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு இன்றுவரை முன்வராமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
இந்த இடத்திலே அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்றுவருவது தொடர்கதையாக நாங்கள் அறிந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இதைப்பற்றி அரசாங்கமோ, அரசியல் வாதிகளோ இந்தப்பாலத்தை அகலமாக்குவதற்கோ பாதுகாப்பான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு இன்றுவரை முன்வராமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கையிலே மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தொகையான பாலங்கள் நிர்மாணிக்கப்படுகின்ற போதிலும் மன்னம்பிட்டிப் பிரதேசத்திலே அமைந்துள்ள கொட்டலிய பாலத்தை அபிவிருத்தி செய்யாமல் விடப்பட்டிருப்பது அடிக்கடி பல உயிர்களை பலிகொடுப்பதற்கு வழி சமைக்கின்றது.
இறுதியாக நடைபெற்றிருக்கின்ற இந்த விபத்துக்குப் பின்னராவது இந்தப் பாலத்தைப் பாதுகாப்பான முறையில் அமைத்து விபத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளோடு உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்களைப் பார்க்கலாம் என நினைக்கின்றேன்.
மருதமுனையின் சிரேஷ்ட உலமாக்களில் ஒருவரான யூ.எல். அப்துல்மஜீது மௌலவி அவர்களின் மனைவிதான் இப்றாலெப்பை கதீஜா உம்மா (65) இவர்களின் குடும்பத்தில் பாரிய விபத்தும் அதியுயர் இழப்பும் சோகமும் பதியப்பட்டிருக்கின்றது.

மருதமுனையை சேர்ந்த உமர்லெப்பை முஹம்மது ஆசிக் (36) ஓமான் நாட்டிலுள்ள அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் அவசர விபத்து சிகிச்சைப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.

இவரது மனைவி அப்துல் மஜீது சித்தி சாக்கிறா (36) ஆசிரியையாவார். இவர் தனது ஆசிரியத் தொழிலை விட்டு விட்டு தனது கணவருடன் ஓமான் நாட்டிலே வசித்து வந்தார். இந்த இருவருக்கும் பிறந்த குழந்தைதான் ரித்திக் ரெமி (05).

இவர்களோடு சாக்கிறாவின் தாயாரான ஹாஜியானி இப்ராலெப்பை கதீஜா உம்மா (65), சாக்கிறாவின் சகோதரியின் மகளான முஹம்மது ஜலால்த்தீன் சுஆதா ஆசிரியை, சுஆதாவின் கணவரான மீராசாஹிபு முஹம்மது ஜஹான் பட்டதாரியான இவர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிலே கடமையாற்றினார். இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். சிரேஷ்ட ஊடகவியலாளர் மீரா எஸ். இஸ்ஸத்தீன் அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாக்கிறாவின் மற்றுமொரு சகோதரியின் மகளான அஸ்ஹர்தீன் பாத்திமா இன்சாப் (12) இவர் மருதமுனை தபாலகத்தின் தபாலதிபர் பி.பம். அஸ்ஹர்தீனின் இரண்டாவது புதல்வியாவார். பாத்திமா இன்ஸாப் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தரம் ஏழிலே கல்வி கற்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவி பல திறமைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார் என்பது விஷேட அம்சமாகும்.

இவ்வாறு நல்ல திறமைகளையும், நற்பண்புகளையும் கொண்டிருந்த குடும்பமே விபத்துக்குள்ளாகி உயிரிழந்து மருதமுனைக்கு ஆறாத்துயரை ஏற்படுத்pதயிருக்கிறது.
இந்த ஆறுபேரினதும் நெருங்கிய உறவினர் உள்ள10ராட்சி மாகாண சபை ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பொறியியலாளர் ஐ.ஏ. ஹமீட் ஆவார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி மன்றும் மறுசீரமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். சுபைர் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், கல்முனை மாநகர முதல்வர் செனட்டர் மசூர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல். துல்கர் நயீம், கே.எம்.ஏ. றசாக் (ஜவாத்), ஏ.எம். ஜெமீல் உள்ளிட்ட பெருந்தொகையானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரையை எழுதினேன். இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்படுமாயின் அதற்காக எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் பிரதௌஸ் என்னும் சொர்க்கம் கிடைக்கப் பிராரத்திக்கிறேன்.