ரூகுல் ரஸ்மி கவிதைகள்

தன்கூட்டைப் போல் தலைகீழானது
(....)

மண்டலங்கள் பல தான்
மறைந்தோடி விட்டன
மண்டலம் மண்டலமாக
உள்ளிழுத்தும் வெளியிலிட்டும்
விரயமாக்காவிட்டாலும் - கொஞ்சம்
விரைவாகத் தான் வளியை
வீசியெறிந்து செலவழிக்கிறோம்
அச்சு சுற்ற வேண்டுமென்றோம்
அடுப்பெரிக்கவும் வேண்டுமென்றோம்
அரைக் காசு கூட செலவில்லையென்பதாலோ
அபரிமிதமாகவே நுகர்ந்து தள்ளுகிறோம்
ஆளைக் கொன்றோம் - அதிகமதிகம்
அழிவுகளையும் ஏற்படுத்தினோம்
அரைநொடியையேனும் ஒதுக்கி – வளியின்
ஆயுள் நீடிக்க என்ன செய்தோம்?
கரியமிலம் கோபிக்கக்
கொதித்தழுகும் புவி உருண்டையின்
ஏக்கக் கண்ணீராய்
அமில மழை!
குடை பிடித்து ஒதுங்குவதால் மட்டும்
குறைந்து விடப் போவதில்லை
நாளைய தலைமுறையைக் குறிவைத்திருக்கும்
காலநிலை அணர்த்தம்.
எழுபத்தெட்டு விகித
அருதிப்பெரும்பான்மை அதிகாரத்தில்
செங்கோலோச்சும் நைத( அ)ரசனை
நாசுக்காய் புறந்தள்ளிவிட்டு
கடைநிலைச் சிறையில்
இறைவன் அடைத்திருந்த
காபனீரொட்சைட்டுக்கு
கள்ளப்பட்டாபிஷேகம்
விளைவு.....
பச்சைவீடு அரசனின் சின்னவீடாக
கொடுங்கோலுக்கு மறுபெயர்
குளோபல் வார்மிங் என்றானது.
(......)
தன்னுணவைத் தான்தேடியது
உழைக்காத தந்தைக்கு
தன்மானத்தோடு வாழ
தட்டிக்கேட்கத் தலைப்பட்டது
நேரத்துக்குக் கூடுவந்தது
தன்வீட்டைப் போல் தலைநிமிர்ந்தது
(.....)
உன் முரண் எனக்குப் பிடிக்கும்,
நீ வெட்டி வேறாக்குவதே
ஒட்டித் தைக்கத்தானே
பஸ்லி ஹமீட் கவிதைகள்
எதிரிகளென்று யாருமில்லை














