ஒரு இசமாகட்டும், அல்லது ஒரு இயக்கமாகட்டும், எதுவாக இருந்தாலும் நமது நாட்டில் அதிகமாக உலக ஆதாயங்களை வைத்தே நடத்தப்படுகின்றன.
நம் தமிழ்நாட்டில் இஸ்லாமிய கிராமங்களில் மூடப்பழக்க வழக்கங்களுக்கு குறைவே இல்லை எனலாம்.
தர்ஹா வணக்கம்,
முல்லாக்களை வீட்டுக்கு அழைத்து வந்து பிறந்ததிலிருந்து இறப்பு வரை அவரை வைத்து பாத்திஹா ஓதுவதாகட்டும்,
திருமணத்தில் வரதட்சணை என்ற பெயரில் பெண் வீட்டாரிடம் லட்ச லட்சமாக கொள்ளையடிப்பதாகட்டும்,
இவை எதிலுமே இந்து கிறித்தவ மதத்துக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போடுபவர்களாக முஸ்லிம்கள் இருந்தனர்.
ஆனால் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களாக மேற்கொண்ட அயராத பிரசாரத்தின் பலனாக இன்று பட்டி தொட்டிகளெல்லாம் குர்ஆன் ஹதீஸின்படி தங்களின் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட பல கிராமங்களை நம்மால் பார்க்க முடிகிறது.

பல இளைஞர்கள் 'வரதட்சணை பெண்ணிடம வாங்கினால் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று பெற்றோர்களிடம் வம்பு பண்ணிக் கொண்டிருப்பதை நாம காண்கிறோம்.
முன்பு அறியாத நாட்களில் வாங்கிய வரதட்சணையை பெண்ணின் தகப்பனிடம் திரும்ப கொடுத்த பல நிகழ்வுகளை நாம் பல ஊர்களில் பார்க்கிறோம்.
தர்ஹா கொடியேற்றத்தில் கூட்டங்களை காணவில்லை.
பள்ளிப் படிப்புகளை பாதியிலேயே விட்ட பல மாணவர்கள் இன்று படிப்பின் அருமை உணர்ந்து மற்ற இன மாணவர்களோடு போட்டி போடும் நிகழ்வுகளை ஆங்காங்கே பார்க்கிறோம். எங்கள் ஊரில் இன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவானதை ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.
இருந்த சினிமா ரசிகர் மன்றங்களெல்லாம் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு உள்ளது.
ஆறாவது ஏழாவதோடு பள்ளிப் படிப்பை முடித்த பெண்மணிகள் இன்று காலேஜ் செல்ல பஸ்ஸீக்காக காலையிலேயே வீட்டு வாசலில் காத்திருக்கும் அழகை இன்று எங்கும் பார்க்கலாம்.
இதனை பிடிக்காத சிலர் இவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட ஆரம்பித்தனர். இது போன்ற சீர்திருத்தங்களை எல்லாம் செய்தால் பள்ளியில் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு சில செல்வந்தர்கள் மிரட்ட ஆரம்பித்தனர். உடனே ஒரு இளைஞன் தனது பெயரில் உள்ள பல லட்சம் பெறுமானமுள்ள ஒரு மனையை பொதுவாக்கி 'அங்கு புதிதாக பள்ளி கட்டி கொள்ளுங்கள்' என்று கொடுத்த அழகை என்னவென்பது.
சிங்கப்பூரில் பைலட்டாக வேலை செய்யும் ஒரு இளைஞர் சில கோடிகள் பெறுமானமுள்ள தனது பூர்வீக வீட்டை முதியோர் இல்லமாக மாற்றி ஊருக்கு பொதுவாக்கி தவ்ஹீத் ஜமாத்துக்கு அளித்த ஈகை குணத்தை என்னவென்பது.
இவை எல்லாம் சமீப காலங்களில் நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள். இத்தகைய பரந்த மனப்பான்மையை உண்டாக்கியது எது?
”இறைவனின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு பின்னர் செலவிட்டதை சொல்லிக் காட்டாமலும் தொல்லைத் தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்”.
(குர்ஆன் 2:262)
”தமது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு இறைவன் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். இறைவன் தாராளமானவன், அறிந்தவன்”
(குர்ஆன் 2:261)
மேற்கண்ட இது போன்ற இறைவனின் வசனங்கள் அந்த இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியதாலேயே இவை எல்லாம் சாத்தியப்படுகிறது. இந்த மாற்றங்கள் எங்கள் ஊரில் மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் ஏறத்தாழ இந்த நிலைதான்.

தொகுப்பு சுவனப்பிரியன்
திருத்துறைப் பூண்டியை ஒட்டிய ஒரு குக்கிராமத்தில் சமீப காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை இனி இந்த காணொளியில் காண்போம்.