Thursday, November 24, 2011

தமிழினத்தையே கேவலப்படுத்தி தலைகுனிய வைத்த தமிழ்ப் பாசிசப் புலிகளின் படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்...

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்கள்

தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழர்களின் அறியாமையைப் பயன்படுத்தி புலிப் பயங்கரவாதிகளை போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் சித்தரித்து அப்பாவி தமழக மக்களை நம்பச் செய்துள்ளனர். உண்மை அவ்வாறல்ல...

இந்த அரசியல்வாதிகள் பொய்யுரைப்பதன் காரணம் என்னவெனில் வெளிநாடுகளில் எஞ்சியிருக்கின்ற புலிப்பயங்கரவாதிகள் கொடுக்கின்ற பெருந்தொகைப் பணத்திற்காகவும், அரசியல் சுயலாபத்திற்காகவுமேயாகும்.

தமிழ்நாட்டு மக்கள் உண்மைநிலையை அறியும் பொருட்டு புலிகள் செய்த அட்டூழியங்களை வீடியோ புகைப்பட ஆதாரங்களுடன் தருகிறோம்...

இதனைப் பார்த்து விட்டு தீவிரவாதிகளான அந்த அரசியல்வாதிகளிடம் உண்மை நிலையை தெரிவியுங்கள்... அப்போதாவது தீவிரவாதத்தை கைவிடுகிறார்கள் என்று பார்ப்போம்....

தீவிரவாதி சீமான்
Prabhakaran and Nedumaran
தீவிரவாதி பழநெடுமாறன்
தீவிரவாதி வைகோ

 முஸ்லிம்கள் மீதான ஈழப் போர் என்று கூறி இலங்கை நாட்டை அழிக்க துடித்த புலிகள் அழிந்துவிட்டனர். அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம்..... இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை சொல்லக் கொண்டே போகலாம். புலிகள் செய்த படுகொலைகளில் சில...
Expulsion of an estimated 70000 – 100000 Muslims from the Northern provinceஇரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.

இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற இந்த மோதலில் படையினரிலும் புலிகளிலும் பார்க்க அப்பாவி மக்களின் உயிர்களே பெருமளவுக்குப் பலியெடுக்கப்பட்டன. புலிகள் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல, எல்லைக் கிராமங்களிலுள்ள சிங்களக் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவிச் சிங்கள மக்களை வகை தொகையின்றிக் கொன்றிருக்கிறார்கள். அதேபோன்று கொக்கட்டிச்சோலை, மைலந்தன்னை, வவுனியா உட்படப் பல்வேறு தமிழ்ப் பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்.  
சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி இனவெறியர்கள் சிலரின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட மக்கள் அதிகம். அவர்கள் அப்பாவி மக்களுக்குள் பாய்ச்சிய இனவாதம் இன்றுவரை அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசங்களால் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.  இன்றுவரை தீர்க்கப்படாத இனப்பிரச்சினையால் இலங்கை தேசம் கண்ணீரில் மிதக்கிறது. 
பாசிச புலிகளின் அட்டூழியங்கள் / படுகொலைகள் - வீடியோ

புலிகளின் யாழ்ப்பாண இனச்சுத்திகரிப்பு மற்றும் படுகொலைகள்

புலிகளின் காத்தான்குடி படுகொலைகள் மற்றும் அட்டூழியங்கள்
(இந்த வீடியோவை L.T.T.E ஆதரவாளர்கள் எமது இணையத்தளத்திற்குள் அத்துமீறி நுழைந்து அழித்துவிட்டனர். மீண்டும் இறைவனின் உதவியால் அதனை கண்டு பிடித்து வெளியிடுகிறோம்)...

புலிகளினால் முஸ்லிம் சிறுவர்கள் கொத்துக் கொத்தாக
 கொல்லப்படுகின்ற நேரடிக் காட்சி

புலிகளினால் விளையாட்டு வீரர்கள் கொல்லப் படுகின்ற காட்சி

1990 ஆகஸ்டு-03 —-காத்தான்குடி படுகொலை

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியானது.

1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள்  மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள்  ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
12-07-1990 மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை  குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ பாசிசப் புலி பயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர்.
03-08-1990 காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும்  ஹுசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலி பயங்கரவாதிகளால் சராமாரியாக சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் எல்லோருமாக 116 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளினால் வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
1992 ஏப்ரல் 29ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். 1992 ஜூலை 15ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப் பட்டனர்
1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இக்கால பகுதில் பல பாசிச கொலை வெறியாட்டங்கள் அரங்கேறின ஆனால்   இன்று பல கொலை வெறியாட்டம் போட்ட பாசிச பயங்கரவாத கும்பல் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கபட்டனர், பயங்கரவாத கொட்டம் அடங்கியது நாட்டில் அமைதியை விரும்பிய அனைவரும் மகிழ்ந்தனர். தமிழ் புலி பயங்கரவாதிகளை ஆதரித்தவர்கள்  மாற்று சமூகத்துடன் நற்பண்புடன் இனியாவது பழக கற்றுகொள்ளவேண்டும்   குறிப்பாக தமிழ்பேசும் முஸ்லிம்களுடன்.


கிழக்கு முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்த புலிகளின் வீர..??? வரலாறு

2006

ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை

ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை

ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள்  படுகொலை

ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள்  படுகொலை

ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை


முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி  கொன்றுவிட்டு  அவளின் வயிற்றை   கோடரியால் கொத்தி  கிழித்து சிசுவை  வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை  சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது
சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கரவாதபுலிகள் ஒரு மாதமே ஆன  சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து  தலை சிதறடிக்கப்பட்ட பின்  வீசி  எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்
104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

LTTE_ATrocities_20060918_Some_of_the_Muslims_killed_by_LTTESRI LANKA-UNREST-MUSLIM-MASSACRE
mass4
LTTE Kattankudi Muslim Mosque Massare 12
LTTE Kattankudi Muslim Mosque Massare 15SRI LANKA-UNREST-MUSLIM-MASSACRE


Tuesday, November 15, 2011

வேற்று கிரகவாசிகள்! ஓர் அறிவியல், ஆன்மீக கண்ணோட்டம்




விண்ணில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?
(ஓர் ஆன்மீக அறிவியல் கண்ணோட்டம்)

உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் என்று நாளுக்கு நாள் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த உலகின் வின்வெளி பற்றிய ஆய்வுகளும் அபூர்வங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வின்வெளியின் அமைப்பு அதன் செயற்பாடு பற்றியெல்லாம் பல ஆய்வுகளை அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் செய்தாலும் இதுவரை இந்த வின்வெளி ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கீங் கலிலியோ கலிலி போன்றவர்கள் தொடக்கம் இன்றுள்ள விஞ்ஞானிகள் வரை அனைவரையும் இந்த வின்வெளி பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது.இனி விஷயத்திற்கு வருவோம்.

வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவாஅப்படி வாழ்ந்தால் அவற்றின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?அவைகளும் மனிதர்களைப் போன்றனவா?அல்லது வித்தியாச குணங்கள் கொண்டவையா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்க்குத்தான் யார் இருக்கிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள்.

முதலில் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாக சொல்லப் படும் கதைகள் என்ன?கற்பனைகள் என்ன?விஞ்ஞானத் தகவல்கள் என்னஎன்பவற்றைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொண்டால் இதன் உண்மை நிலையை புரிந்து கொள்வது மிக எழிதானதாகி விடும்.


பூமியில் இறங்குவதாக சித்தரிக்கப்பட்ட பறக்கும் தட்டு (வரைபடம்)

 வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான கதைகள்.
இது தொடர்பாக நிறையக் கதைகள் இருந்தாலும் மக்கள் பெறுமளவுக்கு நம்பக் கூடிய  கிட்டத்தட்ட 5அல்லது 6 கதைகள் உள்ளன.அதில் முதலாவது: 1254ம் ஆண்டு இங்கிலாந்தின் எல்பன்ஸ் தேவாலயத்திற்கு மேலால் புதுமையான பறக்கும் பொருள் ஒன்று காணப்பட்டதாகவும்,அது வேற்றுக்கிரக வாசிகள் வருகை தரக்கூடிய பறக்கும் தட்டாக இருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது.


Aliens எனப்படும் வேற்று கிரகவாசிகள் (கிராபிக்ஸ் படம்)

அதே போல் 1741ம் ஆண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதிக்கு மேலாக வட்ட வடிவத்தை விட சற்று சரிவான மர்மப் பொருள் ஒன்று பறந்து வின்னில் மறைந்ததாக போசெப் பிரபு என்பவர் கூறியிருந்தார்.அதுபோன்றே மின்குமிழ் வடிவத்தில் பறக்கும் பொருள் ஒன்று சுவிற்ச்சர்லாந்திற்கு மேலால் பறந்ததாக 1762ம் ஆண்டு கூறப்பட்டது.பிரான்சின் எம்பிரம் பகுதிக்கு மேலாக வட்ட வடிவில் பறக்கும் தட்டுக்கள் பல பறந்ததாக 1820ம் ஆண்டு தெரிவிக்கப் பட்டது.

Aliens எனப்படும் வேற்று கிரகவாசி (கிராபிக்ஸ் படம்)

1947ம் ஆண்டு பறக்கும் தட்டொன்ரைப் பார்த்ததாக விமான ஓட்டி ஒருவர் கூறிய தகவலும் இருக்கிறது.தாம் பறக்கும் தட்டுக்களால் கடத்திச் செல்லப் பட்டதாக 1971ம் ஆண்டு இரண்டு அமெரிக்கர்கள் கூறியிருந்தனர்.அதில் இருந்த உயிரினங்கள் அதிக உயரமும்,மெல்லிய உடம்பையும் கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.இவ்வாரான ஏராலமான கதைகள் காணப்படுகின்றன.எல்லாம் கதைகள்தானே தவிர நிஜங்கள் அல்ல.

பறக்கும் தட்டுகள் பற்றிய விளக்கம் என்ன?
பறக்கும் தட்டு என்ற பெயரில் ஒன்று இந்த உலகுக்கு அடிக்கடி வந்துபோவதாகவும் அதில் ஏதோ மனிதனை ஒத்த தோற்றத்தில் உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட வடிவத்தில் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வதாகவும் அது உலகில் உள்ள வாகனங்களை விட வித்தியாசப் படுவதாகவும் சொல்லப் படுகிறது.ஆனால் இவையனைத்தும் வடி கட்டிய பொய்களாகும்.

மில்லியன் கணக்கில் பறக்கும் தட்டுக்கள்(?)
கடந்த 40 வருட காலப் பகுதிக்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வேற்றுக் கிரகங்களில் இருந்து வருவதாக நம்பப் படும் மர்மப் பொருட்களை,பறக்கும் தட்டுக்களை தாம் கண்டதாக கூறியுள்ளனர்.1974ம் ஆண்டு அமெரிக்காவில் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப் பட்டது.அதில் அநேகர் இத்தகைய மர்மப் பொருட்களை கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.(இதுவும் இதுவரைக்கும் நிரூபிக்கப் படவில்லை)
1952ம் ஆண்டில் மாத்திரம் இவ்வாரான 1500 பறக்கும் தட்டுக்கள் வரை தெரிந்ததாக உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல்கள் தெரிவிக்கப் பட்டன.அநேகமானோர் பறக்கும் தட்டுக்களாகக் கருதியவை வித்தியாசமான உரு அமைப்பை உடைய விமானங்கள்,
முகிற்கூட்டங்கள்,நட்சத்திரங்கள்,செய்மதிகள் ஆகியவை தாம் என்று பின்பு புலனாகியது.


ராடார் எனும் கருவியில் சிக்காத நவீனரக போர் விமானம் (இதைத்தான் பறக்கும் தட்டு என நினைத்து விட்டார்களோ)

அதே போன்றுதான் 1964ம் ஆண்டு சுவீடனுக்கு மேலாக பறக்கும் தட்டுக்களை அவதானித்ததாக கிட்டத்தட்ட 1000க்கும் மேற்ப்பட்டவர்கள் தெரிவித்தனர்.ஆனால் அத்தனை பேரும் அதை ஒரு ராக்கட் வடிவத்திற்குத்தான் ஒப்புக் காட்டினார்கள்.இதுவும் இது வரைக்கும் உண்மையென்று யாராலும் நிரூபிக்கப் படவில்லை.
அது போன்றே ஈஸ்டர் தினத்தின் முக்கியத்துவம் மிக்க மோய் உருவச்சிலை வேற்றுக்கிரக வாசிகளின் உதவியுடனேயே நிர்மானிக்கப் பட்டதாக சிலர் நம்புகின்றனர்.ஆனாலும் இவைகள் பொய்யான தகவல்கள் என விஞ்ஞானிகள் உருதியாக கூறிவிட்டனர்.

மனிதன் விண்ணில் வாழ முடியுமா?
இந்த உலகைப் பொருத்தவரை மனிதன் வாழ்வதற்குறிய சிறப்பான தகுதியான இடமாக இறைவன் பூமியை மாத்திரம் தான் அமைத்திருக்கிறான் பூமியல்லாத எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாதென்பது உருதியாக்கப் பட்ட விஞ்ஞானமாக இருக்கிறது.
இதையே திருமறைக் குர்ஆனும் தெளிவாக உருதிப் படுத்துகிறது.

பூமியில் தான் வாழ முடியும்.
மனிதன் பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் என்பதை கீழ்க்கானும் திருமறை வசனங்கள் தெளிவா எடுத்தியம்புகின்றன.


அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள்இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளனஎன்றும் நாம்கூறினோம்.(2:36)

(
இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன என்று (இறைவன்) கூறினான்.(7:24)

'
அதிலேயே(பூமியிலேயே)வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.(7:25)
  
பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்(7:10)
அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்(30:25)
இவ்வசனங்களில் இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்துகூறப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக்குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின்துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பதுநிரூபிக்கப்பட்டுள்ளது.
மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5 80 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.

முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து இக்கோளின் அதிகப் பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.

அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.

வீனஸ் எனப்படும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10 08 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம்நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.
மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது.சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலை விலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ளகாற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகிதஅளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரிசென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால்இங்கும் மனிதன் வாழ முடியாது.

ஜூபிடர் எனும் வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில்உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.

பறக்கும் தட்டு (கிராபிக்ஸ் படம்)

சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில்உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரிசென்டிகிரேட் வெப்பமே உள்ளது.

யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும் நெப்டிய+ன்கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும் புலூட்டோ கிரகம்சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில்கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.

பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர் காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும் இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.

சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள ப+மியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.

சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும் குளிரும் பூமியில் மட்டுமேஉள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கிவிடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். உயிர் வாழ அவசியமான காற்றும் ப+மியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில் அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது.
அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனி லிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடைகுளிர் வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.

நவீனரக போர் விமானம் -  இதர போர் விமானங்களுடன்

இறைவன் சொன்ன வார்த்தைகள் விஞ்ஞானமே தோற்றுப் போகும் அளவு மிகவும் உருதியானதாக உள்ளது.

ஏன் எனில் மனிதன் சுகமாக தனது வாழ்வை இந்தப் பூமியில் மாத்திரம் தான்கழிக்க முடியும் என்பது முக்காலமும் அறிந்த இறைவன் விதித்த முறையாகும்.

ஆக எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டாலும் கடைசிவரை மனிதன் இந்த பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் ஒரு சில நாட்கள் மாத்திரம் தான் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனைப் பயன் படுத்தி மற்ற கோள்களில் தங்க முடியும் அது தவிர பூமியில் வாழ்வதைப் போல் வாழ இயலாது என்பது தெளிவாகி விட்டது.

விண்ணில் உயிரினங்கள் வாழ்கிறதா?
பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்று திருமறை வசனம்தெரிவித்தது விஞ்ஞானமும் அதனை உருதிப்படுத்தியது.ஆனால் வின்னில் மனிதனால் வாழ முடியாதே தவிர அங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று விஞ்ஞானம் ஊகிப்பதை திருமறை மறுக்கவில்லை.

பூமியல்லாத மற்ற இடங்களில் மற்ற சில உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்று திருமறையில் இறைவனே குறிப்பிடுகிறான்.

(
ஆனால் பறக்கும் தட்டு தொடர்பான உயிரினங்கள் பற்றிய செய்திகள் பொய்யானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்)

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29)
மேற்கண்ட வசனத்தின் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் என்ற வாசகத்தின் மூலம் பூமி அல்லாத மற்ற இடங்களில் நமது விஞ்ஞானத்தினால் இது வரை கண்டு பிடிக்காத (அறிவியல் வளர்ச்சியின் மூலம் பிற்காலத்தில் கண்டு பிடிக்கலாம்) உயிரினங்களை இறைவன் படைத்திருக்கும் செய்தியை தெளிவாக குறிப்பிடுகிறான்.
துருவப் பிரதேச ஆய்வின் போது செவ்வாயில் இருந்து விழுந்ததாக சொல்லப் பட்ட பனியைப் பற்றி ஆய்வு செய்யப் பட்டதில் அதன் உள்ளே இருந்த பாசிலைப் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையானதாக இருப்பின் திருமறையின் இவ்வசனத்தை விஞ்ஞானம் உருதிப் படுத்திய பட்டியலில் முதன் முதலில் இந்தப் பாசிலைப் பற்றிய செய்தியே இடம் பிடிக்கும்.

இந்தப் பாசிலைப் பற்றிய செய்தி செவ்வாய் மற்றும் அதைப் போன்ற மற்ற கோள்களிலும் சூட்சும உயிரினங்கள் (Micro-Organism) இருப்பதாகவே கூறுகின்றன.

உதாரணமாக மனிதனாகிய நாம் கரிமம் அடிப்படையிலான உயிரினமாக (Cabom Based Organism) படைக்கப் பட்டுள்ளோம்.இதே போல இந்தப் பேரண்டத்தின் மற்றக் கோள்களில் சிலிக்கான் (Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அதைப் போன்ற வேறு தனிமங்களை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம்.

ஆனால் அப்படிப் பட்ட கோள்களில் புவிவாழ் உயிரினங்களாகிய நாம் ஒரு போதும் கண்டிப்பாக வாழ முடியாது என்பது தெளிவான விஷயமாகும்.

எது எப்படியோ விஞ்ஞானம் சொல்கிறதோ இல்லையோ முக்காலமும் அறிந்த இறைவன் பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்றும் பூமியல்லாத மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றும்  தெளிவாக சொல்லியுள்ளான் இதுவே நமது நம்பிக்கைக்கு போதுமான ஆதாரமாகும்.
தொகுப்பு : ரஸ்மின் M.I.Sc
உதவியவை :
சகோதர் பி.ஜெ அவர்களின் திருக்குர்ஆன் மொழியாக்கம் விளக்கம் பகுதி
சகோதர் ஏ.கே.அப்துர் ரஹ்மான் அவர்களின் திருக் குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.
டிஸ்கவரிசேனல்