இவர்களே இவர்களைப் பற்றி தகவல் தரக் காரணம் இவர்களின் சரியான செயல்பாடுகளை நாம் கண்டுபிடிக்காது எம்மைத் திசை திருப்பவே.
இன்னொரு சாரார் காழ்ப்புணர்வின் அடிப்படையில் விமர்சிப்பவர்கள். 90% உண்மையோடு வேண்டுமென்றே 10% பொய்யைக் கலந்து தருபவர்கள்.
இவர்களில் இலுமினாடிகளின் ஆதரவாளர்களும், எதிரிகளும் அடங்குவர். அடுத்த தரப்பினர் நடுநிலையோடு தகவலைத் தருபவர்கள். இவர்களின் தகவல்களும் 100% உண்மை அல்ல. ஆனால் தவறுதலாக ஆய்வின் அடிப்படையில் பிழை விடுபவர்கள்.
இந்த மூன்றையும் வைத்து ஓரளவு உண்மையைக் கண்டு பிடிப்பதே நாம் செய்த வேலை ஆகும். இதனால்தான் நான் சொல்லும் சில விஷயங்கள் தேடியும் கிடைக்கப் பெறாது.
அதாவது 3 தரப்பாரும் ஒரே விடயத்தைச் சொன்னால் ஓரளவு அது உண்மையாக இருக்கும். இவை அனைத்தையும் குரான் மற்றும் ஹதீதுடன் உரசி உரசி பெறப்படும் முடிவுகள் தான் என்னால் இங்கு சொல்லப்பட இருக்கிறது. நீங்களும் தேடித் பார்ப்பதன் மூலம் நான் பிழையான முடிவுகளை சொல்லும்போது அதை திருத்த உதவியாக இருக்கும். இப்போது விஷயத்துக்கு வருவோம்.
இவர்களின் கொள்கை
”கடவுள் மனிதனின் எதிரி. சைத்தான்(லூசிபர்) தான் மனிதனின் நண்பன் (லுசிபரிசம்)”
அதாவது மனிதனைப் படைத்துவிட்டுக் கடவுள் அந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று சொன்னது மனிதனோடு உள்ள பொறாமையினால் ஆகும். சாகா வரம் அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்று அக்கனியைச் சாப்பிட்டால் மனிதனுக்குக் கிடைத்துவிடும் என்ற பொறாமைதான் கடவுளுக்கு இருந்துள்ளது. ஆனால் சைத்தான் எப்படியாவது மனிதனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியதால் தான் அவ் உண்மையை ஆதமுக்குச் சொன்னான். எனவே மனிதனுக்கு நலம் நாடுபவன் சைத்தானே.
நோக்கம், இலக்கு
”உலகத்தின் ஆட்சியை தஜ்ஜாலின் கையில் கொடுத்தல்”
அதாவது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட லுசிபரிசத்தை மீண்டும் வெற்றிகொள்ளச் செய்தல்.
செயல் திட்டம்
மறைக்கப்பட்டுள்ள இதைத்தான் விரிவாக பேச உள்ளோம்.
இந்த லுசிபரிசக் கொள்கையானது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களுடைய இயக்கங்களாக வேறுபட்ட செயல்பாடுகளுடன் இயங்கி வந்துள்ளது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இயக்கம் ஆட்சி (dominant) செய்துள்ளது. ஒரே கால கட்டத்திலும் இக்கொள்கை வேறுபட்ட பெயர்களிலும் இயங்கி வந்துள்ளது. ப்ரீ மேசன்த்ரி என்பது இதன் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.
ஈசா நபி உயர்த்தப்பட்டதில் இருந்து முஹம்மது நபியின் காலம் வரை 2 இயக்கங்கள் அதிகம் செயல்பட்டது.
1. ஜெசுவிஸ்ட்.( இப்போது இது வத்திக்கானை ஆட்சி செய்யும் கூட்டமாக மட்டும் சுருங்கி விட்டது.
2. ப்ரியோரி டி சியோன்.
இவை 2 உம் ஈசா நபி கொண்டுவந்த உண்மையான மார்க்கத்தை அழிப்பதற்காக பாடுபட்ட இயக்கங்களாகும். ஈசா நபி பிறந்த மண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாத இத்தாலியில் உள்ள வத்திக்கானுக்கு கிரித்தவ தலைமையை மாற்றி அமைத்தது இவர்களின் வெற்றிக்கு சான்றாகும். ( இதன் முழு வரலாறு பின்னர் விளக்கப்படும்).
”முகம்மது நபிக்குப் பிறகு சிலுவை யுத்தக் காலப் பகுதியில் ஆட்சி செய்த இயக்கம் தான் நைட் டேம்ப்லேர்ஸ். இன்றைய காலத்தில் பெயர்பெற்று விளங்கும் இயக்கம்தான் இலுமிநாடி”
இன்ஜீல் ரோமன் கத்தோலிக்காக மாறிய வரலாறு
இஸ்ரவேல் சமுதாய மக்கள் வாழ்ந்த பிரதேசம் கானான், ஜெரூசலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும். வரலாற்று ஆசிரியர்களால் kingdom of isreal என அழைக்கப்படும் பிரதேசம் இதுவே. ஈசா நபி உலகத்தில் இருந்த காலத்தில் இன்ஜீல் பெரிய அளவு வளரவில்லை. அவர்கள் உயர்த்தப்பட்டவுடன் இன்ஜீளின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. ஆனாலும் ஈசா நபியைக் கொல்ல முயன்ற யூதர்களின் கைதான் அப்பிரதேசத்தில் ஓங்கி இருந்தது.
ஈசா நபி உயர்த்தப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெருசலத்தை ரோமர்கள் (இத்தாலியர்கள்) கைப்பற்றினர். இவர்கள் பல கடவுள் வழிபாடு செய்வதால் இவர்கள் pagans என அழைக்கப்பட்டனர். இவர்கள் யூதர்களுக்கு அதிக அளவில் அட்டூழியம் செய்தனர். குறிப்பாக ஒரு கடவுள் கொள்கையைச் சொல்லும் இன்ஜீலை உடைய யூதர்களுக்கு அதிகம் அநியாயம் செய்தனர். ஏன் எனில் இன்ஜீல் ரோமர்களின் மதத்தை அழிக்கும் என்று பயந்தனர்.
அநியாயம் செய்யச் செய்ய, எதிர்க்க எதிர்க்க இன்ஜீலின் வளர்ச்சி இன்னும் அதிகமாகியது. சத்தியம் இப்படித்தான் வரலாறு நெடுகிலும் வளர்ந்தது. எந்த அளவுக்கு என்றால் 300 ஆண்டுகளில் இன்ஜீல் ரோமப் பேரரசு வரை பரவியது. பல கடவுள் கொள்கைக்கும் ஒரு கடவுள் கொள்கைக்கும் நிலவிய இந்தப் போராட்டத்தை நிறுத்தி இன்ஜீலை அழிக்க எந்த ரோம அரசராலும் முடியவில்லை. இந்தக் காலக் கட்டத்தில் தான் கான்ஸ்டடீன் (constantine the great ) ரோமர்களின் அரசராக வருகிறார்.
இவர் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிவிட்டார். இன்ஜீல் என்பது அடித்து ஒழிக்க முடியுமான மார்க்கம் அல்ல. மாறாக அணைத்து ஒழிக்க வேண்டிய மார்க்கம். இவர் இன்ஜீல் உடையவர்களை எந்த அளவு அணைத்தார் என்றால் அவர் இன்ஜீல் மார்க்கத்தை தழுவியே விட்டார். துருக்கியின் இன்றைய இஸ்தம்பூலை கேந்திர நகரமாக மாற்றி அதற்கு தனது பெயரான கொன்ஸ்தாந்து நோபிள் என்று பெயர் வைத்தவரும் இவர்தான்.
இந்தக் காலக் கட்டத்தில் உண்மையான இன்ஜீளோடு சில பித்அத்களும் கலக்க ஆரம்பித்துவிட்டது. இதன் பின்னர் இவர் ரோமர்களையும், இன்ஜீலை உடையவர்களையும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாட ஏற்பாடு செய்தார். இதன் முதல் சந்திப்புக்குப் பெயர் council of nicea என அழைக்கப்படும். இதில் முதன்மையாகப் பேசப்பட்ட விடயம் தான் எமக்கிடையே ஒற்றுமை முக்கியம் என்பது. ஒற்றுமைக்காக நாம் இரண்டு தரப்பாரும் சில மார்க்க விடயங்களை விட்டுத் தரவேண்டும் என்று பேசப்பட்டது.
இதில் முக்கியமாக அஜெஸ் பண்ணிய விடயம் இன்ஜீலில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கை முடிந்த அளவு அஜெஸ் பண்ண வேண்டும் என்பது. தவ்ராத்தின் (அவர்கள் மொழியில் 10 commandments ) சில பகுதிகள் நீக்கப்பட்டன. சிலை வழிபாடு புகுத்தப்பட்டது. உத்தியோகபூர்வமாக இன்ஜீல் modify பண்ணப்பட்ட கிறித்தவமாக மாற்றப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் தான். இதற்கு nicene creed என்று பெயர்.
இதன்போது அங்கிருந்த மிகச்சில இன்ஜீல் வேதத்தை பித்அத் கலக்காது பின்பற்றியவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவர்களின் வாதம் எடுபடாமல் போகவே கடைசியில் அவர்கள் வெளிநடப்பு செய்து உண்மையான இன்ஜீலை தனித்தனியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். (இவர்களின் வரலாறு தனியாக பேசப்பட வேண்டியது. குறைந்த தகவலே உண்டு. )
இவ்வாறு மாற்றப்பட்டதுக்கு ஆதாரமாக இன்று கூட கிரித்தவ ஆலயங்களின் கட்டடக் கலை, சிலைகள் போன்றவை யூத கலாச்சாரம் அல்லாது ரோமக் கலாச்சாரமாகக் காணப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கம் என்ற பெயர்கூட இதற்கு மிகப்பெரிய சான்றாகும்.
அந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொண்ட இன்ஜீலை உடைய மக்களையும், ரோமர்களையும் வைத்து ரோம அரசாங்கம் கிறித்துவத்தை நிறுவியது.
இதுதான் ஈசா நபி கொண்டுவந்த இன்ஜீல் என்று உலகத்துக்கு அறிவித்தது. இவர்களிடம் ஆட்சி இருந்ததால் உண்மையான ஓரிறைக் கொள்கையாளர்களை விட இலகுவாக தமது பிரச்சாரத்தைப் பரப்ப இலகுவாக இருந்தது. இதுதான் இன்ஜீல் ரோமன் கத்தோலிக்கமாக மாறிய சுருக்கமான வரலாறு
கிறித்தவம் கொள்கை ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட வரலாறு
கிறித்தவம் அரசியல் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை மேலே பார்த்தோம். கிறித்தவம் கொள்கை ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்.
ஈசா நபி உயர்த்தப்பட்டு முதல் நூற்றாண்டிலேயேஅவர் கொண்டுவந்த தூய மார்க்கத்தின் கொள்கை மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. கிறித்தவத்தை இந்த அளவு கொள்கை ரீதியாக மாற்றியதில் மிக அதிக பங்கு இருப்பது பவுல் என்பவருக்கே.
யார் இந்தப் பவுல்? வரலாற்றில் இவர் ஒரு மர்மமான மனிதர். இவரின் உண்மையான பெயர் Saul of tasus. இது கிரேக்க மொழிப் பெயராகும். கிறித்தவத்தை ஏற்க முன்னர் இவர் நசாராக்களுக்கு அதிகம் அநியாயம் செய்த ஒருவராவார். இவர் டமஸ்கஸ் நகரத்துக்கு பிரயாணம் போகும் வழியில் இவரில் அதிக மாற்றம் காணப்டபட்டது. திரும்பி வந்த பின்னர் திடீர் என கிறித்தவ மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார். ஏற்றது மட்டுமன்றி மும்முர பிரச்சாரகராகவும் மாறி தனது மொத்த வாழ்க்கையையும் கிறித்தவத்துக்காக அர்ப்பணம் செய்கிறார்.
தனது வசதிக்காக இவருடைய பிரச்சார அமைப்பு எப்படி இருந்தது என்றால் தான் பல கடவுள் ரோமனியர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு ரோமானியர் என்றும், யூதர்களைச் சந்திக்கும்போது தான் ஒரு யூதன் என்றும் கூறுவார். கிறித்தவர்களிடம் கிறித்தவராகவும் நடந்து கொள்ளுவார். இவர் தெளிவான நயவஞ்சகனாகவே நடந்து கொண்டு அதை சரிகாணவும் செய்தார்.
கிறித்தவ மதத்தில் உண்டான அதிக மாற்றங்களுக்கு இவரே காரணம். நசாராக்களின் மதக் கலாச்சாரம் யூதர்களைப் போலவே இருந்தது.(யூத வம்சத்தில் வந்ததால்) இதனை முற்றாக மாற்றி வேறு விதமான மதக் கலாச்சாரத்தை நுழைத்தவர் இவரே. இதற்கான தெளிவான சான்று இப்போதைய பைபிளை பார்த்தவுடன் விளங்கும். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும். புதிய ஏற்பாடு மொத்தமாக இந்த பவுலின் கைவரிசையினால் ஆனது.
லுசிபரிஸத்தை பின்பற்றும் சைத்தானியக் கூட்டம் வேதங்களை மாற்றியமைக்கும் ஒழுங்கு ஒன்று உள்ளது.
1. முதலில் நல்லது என்ற போர்வையில் பித்அத்தை(நவீனம்) தோற்றுவித்தல்
2. இந்த விரிசலுக்குள் இணைவைப்பை நுழைத்தல்
3. அப்படியே குப்ருக்கள்(இறை மறுப்பு) கொண்டுசெல்லல்.
அத்தோடு அவ்வேதம் அழிந்துவிடும்.
இதனால் தான் இறுதி வேதமான இஸ்லாத்தைப் பாதுகாக்க அல்லாஹ் பித்அத் சம்பந்தமாக அதிக எச்சரிக்கை செய்துள்ளான். இனிமேல் நபி வரமாட்டார்கள் என்பதால்தான் கடைசி நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் பித்அத் பற்றி எச்சரித்தார்கள். வேதங்களை அழிக்கும் முதல் படிதான் இந்த பித்அத்.
பித்அத்தை தோற்றுவிப்பது எவ்வாறு?
இதே ஸ்டைலில் தான் பவுல் இஞ்சீல் வேதத்தை அழித்தார். மனிதர்கள் மீது அதிக பற்றை ஏற்படுத்துவதன் மூலமே பித்அத் நுழையும். அவர் என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம் உருவாகும். ஈசா நபி மீதும், அவரது தாயார் மீதும் அளவு கடந்த சென்டிமன்ட் பாசத்தை உண்டாக்கியவர் இந்த பவுல். ஈசாவோடு சேர்த்து எப்போதும் அம்மாவையும் சேர்த்தே பவுல் காயை நகர்த்துவார். இதன் காரணம் பின்னர் விளங்கும். ஈசா நபியினதும் அவர் தாயினதும் களங்கத்தை நீக்க கடவுளையே ஈசா நபியின் அப்பாவாக்கினார். ஈசா நபியின் மீது அதிக பாசம் ஏற்படுத்தியதும், இதனுடன் அம்மாவை சேர்த்துக் கொண்டதும், கடவுளை ஈசா நபியின் தந்தையாக்கியதும் கிறித்தவத்தில் திரித்துவத்தை ஏற்படுத்தவே.
இணைவைப்பை நுழைப்பது எவ்வாறு?
வரலாற்றில் சைத்தானியர்கள்(லுசிபரிசம்-இலுமினாடிகள்) ஒரு கடவுள் கொள்கையை அழிக்க எடுத்த முதல் ஆயுதம் திரித்துவம்தான். கடவுள் ஒன்று என்பதை உடைக்க ஒரேயடியாக பலகடவுள் என்று சொல்ல முடியாது. மூடலாக ஆரம்பிக்க வேண்டும். ”மூன்றும் ஒன்றல்ல. ஒன்றுக்குள் ஒன்று. ஆனால் மூன்று. முன்றும் ஒன்று” என்ற குழப்பமான கொள்கைதான் பல கடவுள் கொள்கையின் ஆரம்பம்.
திரித்துவம் கிறித்தவத்துக்கு மட்டும் உரிய கொள்கை அல்ல. காலத்துக்குக் காலம், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வழங்கப்பட்ட மார்க்கங்கள் இந்த திரித்துவத்தின் மூலமாகவே இணைவைப்புக் கொள்கையாக சைத்தானியர்களால் மாற்றப்பட்டது.
உதாரணம்
1. பண்டைய கிரேக்கத்தில் Zeus, athena, apollo. இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.
2. மகாயானா என்ற புத்தமதப் பிரிவில் த்ரிகாய(புத்தரின் 3 உடம்பு)
3. பண்டைய எகிப்தில் osiris, isis, horus
4.இந்து மதத்தில் பிரம்மா, விஸ்னு, சிவன்.
5. மேலும் இந்து மதத்தில் சக்தி, சரஸ்வதி, லக்ஷ்மி
6. பண்டைய பாரசீகத்தில் மித்ரா, இந்ரா, வருணம்
7. பண்டைய அரபுகளிடம் லாத், உஸ்ஸா, மனாத்
8. டாவோசியத்தில் fu, lu, shou
இவ்வாறு இஸ்லாம் தவிர அனைத்து மதங்களிலும் திரித்துவம் உண்டு. இஸ்லாத்திலும் திரித்துவத்தை ஏற்படுத்தி இணைவைப்பைப் புகுத்த இலுமினாடிகள் முயன்று உருவாக்கப்பட்டதே ஷீயா மதமாகும். ஆனால் அதை வேறுபடுத்தி மார்க்கத்தை அல்லாஹ் பாதுகாத்தான். ஷீயாவில் உள்ள திரித்துவம் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன். நீங்கள் தேடிப்பாருங்கள்.
இவ்வாறு மதங்களில் பித்அத்தை புகுத்தி பின் திரித்துவத்தை ஏற்படுத்தி அதில் இணைவைப்பை நுழைத்து கடைசியில் குப்ருக்கு இட்டுச்செல்லும் வேலையை கச்சிதமாக செய்தவர்கள் வரலாற்றில் சைத்தானியர்களே. இதே வேலையை பவுலும் செய்ததால் இவர் ஒரு தெளிவான இலுமினாட்டி என்றே கருதவேண்டும்.
மதங்கள் சைத்தானியக் கூட்டத்தால் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைச் சொல்லவும் அதற்கு உதாரணமாக கிறித்தவ மதத்தைக் காட்டவுமே இங்கு இந்த கிறித்தவ வரலாறு பேசப்பட்டது.
நான் இங்கு கூறியது கிறித்தவ வரலாற்றின் மிக மிக சிறிய சுருக்கமான பகுதியே. கிறிஸ்தவப் பிரிவுகள், கொள்கைக் குழப்பங்கள், நபிகளார் காலத்தில் இருந்த கிறிஸ்தவம் (Eastern authodox christianity) போன்ற நிறைய சுவாரசியமான தகவல்கள் உண்டு. அநேகமானவை எம்மால் இன்னும் படிக்கப்படாமலே இருக்கிறது. தேவைப்படும் போது ஆய்வுசெய்து வெளியிடுகிறோம்.
இலுமிநாடிகள் ஏன் மதங்களை அழிக்க வேண்டும்?
மனிதனைப் பொறுத்த வரை அவன் வாழ எப்போதும் அவனுக்கு அறிவுறுத்தல் தேவைப்படுகிறது. இதுதான் மனித சைகொலோஜி. அப்படித்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். அவன் பிறந்தது முதல் சிறுபிராயம், இளமை, இறப்பு வரை தகவல்கள் வாங்கப்பட்டு அவை தான் அவனை இயக்குகிறது. பிறக்கும் போது மனிதன் வெறும் Processorரோடு மட்டுமே பிறக்கிறான். Data இல்லாமல் Processor இருந்து பயன் இல்லை. ஐம் புலன்களாலும் data அவனால் சேகரிக்கப்பட்டு உள்ளே Process பண்ணப்பட்டு அவைதான் அவனை வாழச் செய்கிறது. நன்மை தீமை போன்றவையும் இப்படியே. அதற்கும் வழிகாட்டல் வேண்டும் என்பதுதான் மனித உளவியல்.
படைத்த இறைவனுக்குத்தான் மிகச் சரியான தகவலை சொல்லித்தர முடியும். உலகத்திலும் மறுமையிலும் வெற்றிபெறும் மொத்தத் தகவலையும் கடவுள்தான் கொடுத்துள்ளான். (முழு விபரம் "மூலாதாரங்களின் ஆதாரம் எது" என்ற எமது ஆக்கத்தில் பார்க்கவும். ) மிகச்சரியான தகவலை மனிதனுக்கு வழங்கி அவனை இரு உலகிலும் வெற்றிபெற வைப்பதே கடவுளின் நோக்கம்.
இதனால் தான் ஆதமுக்கு உலகவிடயங்களையும் இறைவன் கற்றுக் கொடுத்தான், மறுமைக்கான விடயங்களையும் கற்றுக் கொடுத்தான். எனவே மனிதன் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டியவனாக மாறுகிறான். இந்த இடத்தை சைத்தான் அடைய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த தகவல் அழிக்கப்பட வேண்டும். வழி இன்றி மனிதன் இருளில் தவிக்கும் போது சைத்தான் தன் வழியைக் காட்டுவான். ஏதாவது ஒன்றைப் பின்பற்றவேண்டும் என்ற மனித இயல்பு சைத்தானின் வழியைப் பின்பற்றத் தொடங்குகிறது. வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விடம் சைத்தான் விட்ட சவாலை செய்யும் வழி இதுதான்.
நபிமார்களை அனுப்பி அல்லாஹ் வேதம் வழங்குவதும் அதை ஷைத்தானியக் கூட்டம் அழிப்பதும் மீண்டும் அல்லாஹ் வழங்குவதும் என வரலாற்றில் மாறி மாறி நடந்துள்ளது.
இறுதி வேதம் என்று வந்த குரானையும் இதே போன்று இவர்கள் அழிக்க முற்பட்டனர். ஆனால் இது இறுதி வேதம் என்பதால் அல்லாஹ் இதைப் பாதுகாத்தான்.
பித்அத்தையும், இனைவைப்பையும், குப்ரையும் வர முடியாமல் செய்து அல்லாஹ் பாதுகாக்கவில்லை. அவை இருக்கும் போதே சத்தியத்தில் இருந்து அதை வேறாக்கி அற்புதமாக அவன் வாக்களித்த படி பாதுகாத்தான்.
அதாவது எவனெல்லாம் சைத்தானுக்கு நேரடி எதிரியோ, எவன் தூய வஹிப்படி வாழ்கிறானோ அவன் பித்அத, ஷிர்க், குப்ர் என்பதை உயிரைக் கொடுத்து எதிர்ப்பான். நபிகளாரின் மிகச் சிறிய சுன்னா என்றாலும் அதை மிகப்பெரிய விடயமாகக் கருதி அதை பரப்ப முயற்சிப்பான். சிறிய விஷயம் தானே என்று சைத்தான் கால்வைக்கும் முதல் படியை உயிரைக் கொடுத்துப் பாதுகாப்பான். ஷிர்க், பித்அத் இதற்கெதிரான போராட்டமே வஹியைப் பாதுகாக்கும், சைத்தானை எதிர்க்கும் கூட்டத்தின் ஆணிவேராக இருக்கும். (இறுதியில் தாஜ்ஜாளோடு போரிடப் போகும் கூட்டமும் இவர்களே. இதை முழுமையாக கடைசியாக பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்). ஏன் எனில் இந்தக் கடைசி வேதம் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
நபிகளார் தொடக்கம் நபிகளாருக்குப் பின் வரலாறு நெடுகிலும் தூயசத்தியம் அசத்தியத்தோடு கலந்ததே இல்லை. அசத்தியத்திலும் பல வகை உண்டு. முற்றாக வழிகெட்ட கூட்டம். கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லும் அளவுள்ள கூட்டம். சத்தியத்திற்கு கொஞ்சம் நெருக்கமானது என்ற கூட்டம் என பல வகை உண்டு. முற்றாக வழிகெட்ட கூட்டத்துக்கு தூய சத்தியக் கூட்டத்தை விட தூரமான கொள்கைகள் கூட தூய கொள்கையோடு ஒருபோதும் சேராது. தூய சத்தியம் தவிர அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் சத்தியம் எதிக்கப்படும் என்பதை இன்றுகூட காணலாம். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் கூட சத்தியக்கூட்டம் அசத்தியத்தோடு கொள்கையில் சேராது. செத்துப்போனாலும் அது தனித்துத் தான் சாகும்.
இதற்கு முழுக்காரணம் தூய கடைசி வேதத்தை பாதுகாக்கத் தான்.
இல்லுமிநாடிகளின் மதம் என்ன?
உலகத்தில் இறைவனால் இறக்கப்பட்ட எல்லா வேதங்களையும் ஷைத்தானியர்கள் அழித்த விபரத்தை இதுவரை பார்த்தோம். இந்த ஷைத்தானியர்களின் மதம் எது. இந்த மதத்தின் சரியான பெயர் நாம் தேடிய வகையில் கிடைக்கப் பெறவில்லை. பொதுவாக luciferism என்று அழைக்கப் படுவதால் அதை பெயராக சொல்கிறேன். இல்லுமிநாடி, ப்ரீமேசன்த்ரி போன்றவை இயக்கங்களின் பெயராகும்.
பெருமை, ஆணவம், சர்வாதிகாரம் கொண்ட கடவுள் தனது ஆட்சியைத் தக்கவைக்க மனிதன் மீது அநியாயமான, கடுமையான சட்டங்களை விதித்துள்ளான். இதற்குப் பெயர்தான் மதம். இம்மதங்கள் மனிதனுக்கு எதிரானவை. மனிதனுக்கு ஆசையைக் கொடுத்துவிட்டு அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று சட்டம் போடுவது கொடுமையானது. ஆனால் இப்லீஸ் அப்படிப்பட்டவன் இல்லை. மனிதனை நன்கு புரிந்தவன். அவனுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்க நினைப்பவன். இதற்கான வழி இப்லீசிடமே உண்டு. கடவுளைத் தோற்கடித்து மனிதனுக்கு சுதந்திரம் பெற்றுத் தரும் சக்தியும் தேவையும் இப்லீசிடமே உண்டு.
சைத்தானோடு கடவுளை ஒப்பிட்டால் கடவுளுக்குத்தான் சக்தி அதிகம். கடவுளோடு நேரடியாக ஒண்டிக்கு ஒண்டி இப்லீஸ் மோதினால் இப்லீஸ் தோற்று விடுவான். அதனால் மறைமுகமாகவே மோத வேண்டும். இப்படி இவர்களின் மதமான luciferism சொல்வதால் இவர்கள் தமது செயல்பாடுகளை மறைமுகமாக செய்கின்றனர்.
தந்திரம், வஞ்சனை, மறைவு, ரகசியம், கபடம், திரை மறைவு என்பவையே இவர்களின் முக்கிய ஆயுதம்( பலத்தில் கடவுள் பெரியவன் என்று தெரிந்தவர்களுக்கு அறிவிலும் கடவுள் பெரியவன் என்று தெரியாமல் போய்விட்டது)
இவர்களின் திட்டம், செயல்பாடு, வழிபாடு போன்ற எல்லாமே மர்மமானது. மறைவானது. கள்ளத்தனமானது. வஞ்சனை செய்து வீழ்த்துவது போன்றது. இவர்கள் இருட்டில் செயற்படும் கூட்டமாவார்கள்.
பாம்பும், ஆந்தையும் எப்படி இரவில் தந்திரமாக வேட்டையாடுமோ அப்படி தமது வேலைகளை அமைத்துக் கொள்பவர்கள். இதனால்தான் இவர்களின் முக்கிய symbol லாக பாம்பும் ஆந்தையும் காணப்படுகிறது. தந்திரத்துக்கு அடையாளமாக பாம்பையும் ஞானத்துக்கு(great vision and wisdom) அடையாளமாக ஆந்தையையும் வைத்திருக்கின்றனர். பைபிளில் கூட ஆதாமை தந்திரம் செய்து கெடுத்தது சர்ப்பம் என்று தான் உள்ளது. எந்த மதங்களில் எல்லாம் பாம்பு, ஆந்தை உள்ளதோ அவை சைத்தானின் தலையீடு உள்ள மதம் என்று காரண காரிய அடிப்படையில் விளங்கலாம். இவை உள்ள அனைத்தும் ஷைத்தானிய தலையீடு என்று புரிவதும் பிழை.
பழைய பாமசி சிம்போளில் பாம்பு இருப்பது இதற்கு ஒரு உதாரணம். அமெரிக்க டாலரில் ஆந்தை சின்னம் காணப்படும். ( சிம்போல் சம்பந்த்ச்மாக பின்னர் விரிவாக விளக்கப்படும்)
இந்த திரை மறைவு வேலைகளுக்கு இப்லீஸ் சரியான வழியைக் காட்டும் விளக்காக இருப்பதால் அவனை விளக்கேந்தி (bearer of light ) என்று அழைப்பர். இந்த ஒளி கிடைப்போர் நேர்வழியில் உள்ளவர்கள். இலுமினடி என்பதற்கு ஒளி பெற்றோர் என்று பொருள். இதை சூரியனுக்கு ஒப்பிடுவர். சூரிய நமஸ்காரம் செய்யும், சூரியனை சின்னமாகக் கொண்டுள்ளவர்கள் இவர்களின் தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் என காரண காரியங்களோடு விளங்கலாம்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்வது பொருத்தமானது. மறைவாக இருந்து தந்திரம் செய்வது சைத்தானின் செயலாகும். முகநூலில் சத்தியத்தை எதிர்க்க சிலர் கள்ளப் பெயர்களில் வருவதும் அநேகமாக இவர்களின் வழித்தோன்றல்களே. இஸ்லாம் எதையும் மறைக்கும் மார்க்கம் அல்ல. கூலூ கவ்லன் சதீதா- சொல்வதைத் தெளிவாக சொல்லுங்கள். பஸ்தஹ் பீமா துமர்- சத்தியத்தை தயவு தாட்சண்யம் இன்றி சொல்லுங்கள் என்பது குரானின் கட்டளை. சத்திய சீலர்கள் எப்போதும் உண்மையை முகத்துக்கு நேராக உடைத்து சொல்வார்கள். சைத்தானுக்கு எதிரான இந்த பண்புதான் சத்தியசீலர்களின் பண்பாகும்.
நவீன இலுமினாடிகள்

தோற்றுப்போன இப்லீஸ் ஒளிந்துவிட்டான். தனது அத்தனை செயல்பாடுகளையும் மறைத்துவிட்டான். இது இப்படியே நீடிக்காது. மறைவாக இருந்து மீண்டும் வெற்றிபெற தனது ஆயுதமான பொய், புரட்டு, மறைவு, ஒளிவு, ஏமாற்று, களவு, போன்றவற்றை கையில் எடுத்து வேலைகள் செய்கிறான். இவன் கடைசியாக வெற்றிபெற இருப்பது தஜ்ஜால் ரூபத்தில் ஆகும். அவன் தஜ்ஜாலாக மறுபிறவி எடுக்க இருக்கிறான். சாகா வரம் பெற இருக்கிறான்.( மறுபிறப்பு, சாகவரம் கொள்கையுடைய மதங்களான புத்த, இந்து மதம் பற்றி பின்னர் விளக்கப்படும்). இதுதான் இலுமினாட்டிகளின் மத நம்பிக்கை.
தஜ்ஜாலின் வருகைக்கு முன்னர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே இவர்களின் முக்கிய செயல்பாடாக இருக்கும். தஜ்ஜால் வரும் நேரம் அவனுக்கு ஏற்ற மாதிரி உலகம் ஒரு புதிய ஒழுங்கில் அமைந்து இருக்கும். இந்த வேலைத் திட்டத்துக்கு புதிய உலக ஒழுங்கு( நியூ வேர்ல்ட் ஆர்டர் - முழுமையான விளக்கம் இதுவல்ல) என்று சொல்லப்படும்.
இவ்வுலகத்தில் உள்ள அத்தனை துறைகளுக்குமான வழிகாட்டுதல் இறைவனால் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழிகாட்டலுக்கு முற்றிலும் நேர் எதிரான முறையைத் தோற்றுவிப்பதே இவர்களின் நோக்கம். இதில் ஏராளமான விடயங்களை மாற்றியமைத்து அதில் வெற்றியும் கண்டு விட்டனர்.
உலகத்தில் உள்ள நன்மை எல்லாம் தீமையாக மாற்றப்பட வேண்டும். உண்மை எல்லாம் பொய்யாக மாற்றப்பட வேண்டும். சரி எல்லாம் பிழையாக மாற்றப்பட வேண்டும். அல்லாஹ்வின் setupகு முற்றிலும் மாற்றமான setup ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இப்படி உலகில் உள்ள மொத்தத் துறையும் தலைகீழாக மாற்றப்பட்டு அதுவே சரியான முறை என்று தஜ்ஜால் வரும்போது நம்பவைக்கப்பட வேண்டும்.
இந்த செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்த பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுகின்றனர். ஒவ்வொரு குழுவின் செயல் பற்றியும் பின்னர் விளக்கப்படும்.இவர்களின் செயல்திட்டங்களில் சில (ஒவ்வொன்றும் விரிவாக விளக்கப்பட உள்ளன.)
1. அல்லாஹ்வின் முதல் செட்டப்பான வேதங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
(கிருத்தவத்தை உதாரணம் காட்டி விளக்கினேன் )
2. உண்மைகளைப் பொய்யாக்க வரலாறுகளை மாற்றுதல்.
3. வாழ்க்கையின் மொத்தக் கோட்பாடும் மாற்றப்படும்.
4. அறிவின் இடத்தில் அறிவீனம் நிறுத்தப்பட்டு அதுவே சரியான அறிவு என்று அறிவை மாற்றுதல்.
5. ஆரோக்கியம் என்ற பெயரில் உண்மையான ஆரோக்கியம் நோய்களாக மாற்றப்படும். (Allopathy, Vaccine)
6. பொருளாதாரத்தைப் பொருத்தவரை இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்தல் என்பதே வேதங்கள் சொல்லும் நிலை. இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு இருப்பவன் இன்னும் அதிகமாகவும், இல்லாதவன் ஒழிந்து போகும் விதமாகவும் பொருளாதாரக் கொள்கை மாற்றி அமைக்கப்படும்.( வட்டி, இன்னும் பல)
7. அரசியலைப் பொருத்தவரை ஷக்தி உள்ளவனுக்கு சலுகை வழங்கப்பட்டு இயலாதவனை நசுக்கும் சட்டத்தை உருவாக்குதல்.
8. விஞ்ஞானம் என்ற போர்வையில் அஞ்ஞானம் புகுத்தப்படும்.(காடழித்து நாடு செய்யும் மரபு மாறி காடு வளர்க்கப்படும். சூழல் மாசு என்ற பொய்யான விஞ்ஞானம் புகுத்தப்பட்டமை போன்ற ஏராளமான விடயங்கள் பின்னர் விளக்கப்படும்)
9. இறைவனின் படைப்பின் தாத்பரியத்தை மறுக்க கற்பனையை அறிவியல் என்று நம்பவைக்கப்படும்.( கூர்ப்பு )
10. ஆக்கத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் அழிக்கப பயன்படுத்தப்படும்(haarp)
11. குடும்பக்கட்டமைப்பு சீர்குலைக்கப்படும்
12. கலாச்சாரம் தலைகீழாக மாறும்( ஆடை அணியும் சரியான கலாச்சாரம் கேலியாக மாறி கேலிசெய்யப்படவேன்டிய நிர்வாணம் ஒழுக்கமாக மாறும்)
இப்படி சகல துறைகளும் தலைகீழாக மாறி அவை அனைவர் மனதிலும் சரி என்று நினைக்கும் அளவு மூளைச் சலவை செய்யப்படும். மேலே உள்ளவையோடு இன்னும் பல விடயங்கள் மிக விரிவாக விளக்கப்பட இருக்கிறது.
கடவுளின் வழிக்கு நேர் எதிரான வழிதான் லூசிபர் என்று கூறப்படும் சைத்தானின் வழியாகும். நன்மையான விடயம் என்று நாம் கருதுவது எல்லாம் எமது உள்ளம் நன்மை என்று ஒத்துக்கொண்டு ஏற்றுக்கொண்டவையே. தீமைகள் நாம் செய்தாலும் அவை தீமை என்று எமது உள்ளம் சொல்லும். லுசிபரைப் பின்பற்றும் சமூகமான இல்லுமினாடிகளுக்கு இது நேர் எதிராக இருக்கும். அவர்கள் நன்மை என்று செய்பவை எல்லாம் பாவமாக இருக்கும். ஆனால் அவர்களின் உள்ளம் அதைச் சரிகாணும். இதனால் எந்த ஒரு பாவத்தையும் மன உறுத்தல் இன்றி இவர்கள் செய்வார்கள். இக்கருத்தை அல்குர்ஆன் அற்புதமாகச் சொல்லிக்காட்டுகிறது.
இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன. (6:122)
அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (9:37)
இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன. (10:12)
இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (40:37)
உங்கள் உள்ளங்களில் இது அழகாக்கப்பட்டது. தீய கருத்தை எண்ணினீர்கள். அழியும் கூட்டமாகவும் ஆகி விட்டீர்கள். (48:12)
அல்லாஹ்வின் செட்டப்பிட்கு முற்றிலும் மாற்றமான செட்டப்பை இலுமினாடிகள் என்னென்ன அம்சங்களில் எவ்வாறு செய்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
உலக வரலாற்றை மாற்றியமைத்தது பற்றி முதலில் சொல்லலாம் என்று இருந்தேன். மொத்தத் தகவலும் மடிக்கணணியில் இருக்கிறது. மடிக்கணனி பழுதுபட்டிருப்பதால் ஆரோக்கியம் சம்பந்தமாக இங்கு பதிகிறேன். ஆரோக்கியம் சம்பந்தமாக சுருக்கமாக சொல்லப்போனால் கூட 10 தொடர்கள் வேண்டும். எனவே இனிவரும் தொடர்களில் இவையே பேசப்படும்.
உலகத்தில் இன்று ஆரோக்கியம் என்பது நோயாகவும், நோய் என்பது ஆரோக்கியமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மனிதன் உளவியல் ரீதியாகவும், உடம்பு ரீதியாகவும் நல்ல முறையில் வாழ்வதே ஆரோக்கியம் எனப்படும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒன்று கெட்டால் மற்றயதும் கெட்டுவிடும்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்தால் அவன் யாரிலும் தங்கிவாழ்பவனாக இருக்க மாட்டான். மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது அதற்கு என்ன விலையும் கொடுக்க அவன் விளைவான். மருத்துவம் என்ற பெயரில் எதைக் கொடுத்தாலும் கண்ணை மூடி ஏற்றுக்கொள்வான். இந்த உளவியலைப் பயன்படுத்தியே இலுமினாடிகள் மருத்துவத் துறையை கையில் எடுத்துள்ளனர்.
நாம் எதை வாங்கப் போனாலும் அது நல்லதா என்று பார்ப்பது வழக்கம். ஆனால் ஒரு குறிப்பாக ஆங்கில - அலோபதி வைத்தியரிடம் போனால் மறு கேள்வியின்றி அவர் சொல்லும் மருந்தைக் குடிக்கத் தயாராக இருக்கிறோம். மருத்துவராவது அவர் தரும் மருந்து நல்லதா என்று பார்த்திருப்பாரா என்றால் அதுவும் இல்லை.
உதாரணத்துக்கு ஒருவர் வைத்தியரிடம் சென்று வயிற்று வலி என்று சொன்னால் சில கேள்விகள் கேட்பார். வாந்தி வார மாதிரி இருக்கா? நெஞ்சு அடைப்பது போல இருக்கா? நோயாளி ஆம் என்று சொன்னால் இது காஸ்டிக் என்று கருதி ஒமேப்ரசொல் போன்ற மருந்தை கொடுத்து குணமடையாவிட்டால் மீண்டும் வருமாறு சொல்வார். அவர் கொடுத்த மருந்தில் என்ன உள்ளது என்று சோதித்துப் பார்த்துக் கொடுப்பாரா என்றால் இல்லை. இப்படி அறிகுறி வந்தால் இன்ன மருந்து என்று அவர் படித்த கிளிப்பிள்ளைப் பாடத்தின் அடிப்படையில் நடக்கிறார்.
அலோபதி முழுவதும் மோசமானது என்று சொல்லவில்லை. நல்ல விடயமும் உண்டு. நல்லது இருக்கக் காரணம் அதைக் காட்டி தீயதையும் சந்தைப் படுத்தவே.
சைத்தான் கெட்டதை மட்டும் ஏவி நல்லோரைக் கெடுக்க மாட்டான். நல்லதொடு கெட்டதைக் கலந்தால்தான் நல்லது எது கெட்டது எது என்று பிரிக்க முடியாமல் போகும். வெறும் செங்கல் தூளை மட்டும் விற்க முடியாது. மிளகாயோடு கலந்து கலப்படம் செய்தால் தான் சந்தைப் படுத்தலாம். இதுதான் நல்லவர்களைக் கெடுக்கும் சைத்தானின் உத்தி.
இலுமினாடிகள் இதனால் இரண்டு விடயங்களை எதிபார்க்கின்றனர்
1. மனிதனை எப்போதும் நோயில் வைத்து மருந்து என்ற பெயரில் பொருளாதாரத்தைத் திரட்டுதல்.( பின்னர் விளக்கப்படும்)
2. ஆரோக்கியமானவனை விட நோயாளியை தனது பாட்டுக்குள் வைப்பது இலகு( பின்னர் விளக்கப்படும்)
டாக்டரை நாடாத ஒருவனும் இல்லை என்று சொல்லும் அளவு உடல், உள ரீதியாக மனிதனை எவ்வாறு மாற்றியுள்ளர்கள் எனும் தகவல் தொடர்ந்து வரும் insha allah
இங்கு இன்னொரு முக்கிய விடயம் நோக்கப்பட வேண்டும்.
நல்லது என்ற போர்வையில் மார்க்கத்தில் செய்த்தான் விளையாடிய விடயம்தான் பித்அத்.
ஆரோக்கியம் என்பது நோயாகவும், நோய் ஆரோக்கியமாகவும் மாற்றப்படுதல்

ஆரோக்கியம் என்பது நோயாகவும், நோய் ஆரோக்கியமாகவும் மாற்றப்படுவதுதான் ஷைத்தானின் வேலை என்று பார்த்தோம். உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்துக்கும் நோய் வருவது இயற்கை. அநேகமான நோய்கள் இயற்கையான நிர்ப்பீடன சக்தியினால் குணம் அடையும் விதமாகவே இறைவன் அமைத்துள்ளான். மிகச்சரியான உணவுப்பழக்கம், சுத்தமான காற்று, உடட்பயிற்சி( உடலை வருத்தி வேலை செய்தல்), ஒய்வு, தூக்கம், உடல்சுத்தம் போன்றவை சரியாக இருந்தால் நோய் வருவது குறைவு. அல்லாஹ்வின் நாட்டப்படி வரும் நோயும் இலகுவில் குணமடையும். மருந்து என்பது மிகவும் வருத்தப்பட்டு கண்டுபிடிக்கும் ஒன்றல்ல. உடம்பின் நோய் எதிர்ப்புப் போராட்டத்துக்கு உந்துதல் கொடுக்கும் ஒன்றாகவே மருந்து இருக்கும். மருந்து என்ற போர்வையில் நஞ்சை உட்கொள்ளும் வழிமுறையைத்தான் இலுமினடிகள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
நோய் உடம்பைத் தாக்கும் போது உடல் சில அறிகுறிகளைக் காட்டும். இருமல், வாந்தி, பேதி, சொறி, நோ போன்றவை அறிகுறிகளே. ஆங்கில மருந்து பொதுவாக நோயைக் குறிவைத்து கொடுக்கப்படாது. அறிகுறிகளைக் குறிவைத்தே கொடுக்கப்படும்.
உதாரணமாக நீங்கள் வாகனத்தில் செல்லும் போது மஞ்சள் நிற விளக்கொன்று திடீர் எனப் பற்றும். இதற்குத் தீர்வாக அதன் வயரைக் கட்பண்ணினால் விளக்கு அணைந்து விடும். கொஞ்ச நேரம் போக வாகனம் நின்று விடும். அப்போதுதான் புரியும் எரிபொருள் தீரப்போவதற்கான அறிகுறியே விளக்கு என்று.
ஒரு குடும்பத் தலைவன் வீட்டில் தொலைகாட்சி ரசித்துப்பார்க்கும் போது வேலைக்காரி ஒரு பாம்பைப் பார்த்துவிட்டு ஓலமிடும் சத்தம் கேட்டது. இது என்ன தொல்லை என்று வேலைக்காரியின் வாயை மூடுமாறு சப்தமிட்டு மீண்டும் அவன் தொலைக்காட்சியில் மூழ்கினான். மீண்டும் மனைவி ஓலமிட அவள் வாயையும் மூடுகிறான். வீடு தற்காலிகமாக அமைதிபெற்றாலும் பாம்பு இன்னும் வீட்டுக்குள் தான் இருக்கிறது. உறங்கும் பிள்ளையைத் தீண்டும் வரை பாம்பு வந்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் களைவது எவ்வளவு மடத்தனமோ அவ்வாறுதான் நோயை விடுத்து அறிகுறிகளுக்கு வைத்தியம் செய்வது.
எமது உடல் ஒரு முறையான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அரசனாக மூளை இருக்கும். நீங்கள் உறங்கினாலும் அது உறங்காமல் வேலை செய்யும். உங்கள் உடலைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கும். தனக்குத் தேவை இல்லாத எதையும் உடலுக்குள் அனுமதிக்காது.
ஆங்கில மருத்துவத்தில் அதிக நாட்டமுடைய ஒருவர் நஞ்சை உட்கொண்டார் என்று வைத்துக்கொள்வோம். தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும். அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.உடம்புக்குக
ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் வைத்தியரை நாடிச் செல்வார். அவரும் ஒரு Loperamide ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி எமொக்சிலின் ஒன்றை சாப்பிடுவார். நான்காவதாக அதை வெளியேற்ற முளை தோலை நாடும். சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது Benadryl போன்ற மருந்து வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை முளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை(கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசிவிடவே மூளை”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அது brain tumor ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும். உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டுடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும். இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? தாகம் எடுத்தால் நாளைந்து சேலைன் போத்தல் ஏற்றும் வழக்கமா எம்மிடம் உள்ளது?
இதே போல் சத்தி வரும் உணர்வை முளை பிறப்பிப்பது சாப்பிட்டதில் உள்ள வெளியேற்றவே. இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். கையைக் கூட நம்மை அறியாமல் முளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்,
இருமிச் சளியை வெளியெற்றும் முளையின் பாஷையை நோய் என்று சொல்லித்தந்தது யார்? எங்கள் முதாதையர்கள் சொறிந்து கொண்டும், இருமிக்கொண்டும் 80 ஆண்டு வாழவில்லையா? இருமல் எப்படி உணர்ச்சியோ அதே போன்ற உணர்ச்சியே பசியும். இருமல் எப்படி நோயாக மாற்றப்பட்டுவிட்டதோ அதே போல் நாளை பசியும் நோயாக மாற்றப்படும்.(இப்போது மாறிக்கொண்டு வருகிறது). தாகமும் நோயாக மாற்றப்படும். இருமல், சொறிச்சல், வாந்தி, பேதி என்னும் ஆரோக்கியம் எப்படி நோய் என்று தலைகீழாக மாற்றப்பட்டதோ அதேபோல பசிக்கு உண்பது ஆரோக்கியம் என்ற நிலை மாறி அது நோயாக மாற்றப்படும். தாகத்துக்கு தண்ணீர் ஆரோக்கியம் என்ற நிலை மாறி அது நோயாகக் கருதப்படும். கண்ணுக்கு முன்னால் ஆரோக்கியம் நோயாக மாற்றப்பட்டதை இப்போது பார்த்தீர்கள்.
HIV எனும் வைரஸ் AIDS எனும் நோயைத் தோற்றுவிக்கிறதா..?

சரியான வழிமுறைகளுக்கு எல்லாம் நேர் எதிரான வழிமுறையை தான் ஷைத்தான் அறிமுகப்படுத்துவான் என்பதை ஒவ்வொன்றாக நிறுவி வருகிறோம்.
ஆரோக்கியம் நோயாக மாற்றப்பட்டமைக்கு சில ஆதாரங்களை இதுவரை பார்த்தோம். இல்லாத நோயை உண்டுபண்ணுவதில் இலுமினடிகளை விஞ்ச ஆளில்லை என்ற அளவு அவர்களால் உருவாக்கப்பட்ட போலி நோய்கள் ஏராளம்.
சென்ற நூற்றாண்டு இவர்களின் கடைந்தெடுத்த கயமைத்தனத்துக்கு ஒரு உதாரணம்தான் HIV எனும் வைரஸ் AIDS எனும் நோயைத் தோற்றுவிக்கிறது என்பதாகும்.
முறையற்ற பாலியல் உறவால் இந்த நோய் உருவாகிறது என்று கூறப்பட்டாலும் தாய் மகன் வித்தியாசமின்றி முறைகேடான உறவை சர்வ சாதாரணாமாக செய்யும், ஒருபால் உறவில் மூழ்கியிருக்கும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளை விட இந்தியா போன்ற கலாச்சாரத்தை கொஞ்சமாவது மதிக்கும் மூன்றாம் உலக நாடுகளில் அதிகம் இந்த நோய் காணப்படுவது அறிவுக்கு முரணாக இருக்கிறது.
இதுவரை 35 மில்லியன் பேரை பலிகொண்டுள்ள இந்த நோய் HIV வைரசினால் மனித நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி சிறிய தொற்றுதளினாலும் உயிரிழக்க செய்கின்ற ஒன்றாகக் கூறப்படுகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மத்திய ஆபிரிக்க நாடுகளில் வாழ்ந்த சிம்பன்சி குரங்குகளில் இருந்து Zoonosis முறையில் மனிதனுக்குத் தோற்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
HIV எனும் வைரசினால் எயிட்ஸ் நோய் வருவதாக முதலில் சொன்னவர் Robert Gallo. மிகத்துல்லியமாக பரிசோதித்து நிரூபிக்க முன்னரே இவர் Department of Health and Human Services இன் செயலாளர் Margaret Heckler மூலம் இக்கருத்தை ஊடகங்களில் தந்திரமாக வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டு இவருக்கு உண்டு. மிகக் குறுகிய காலத்தில் இவர் மிகப்பெரும் செல்வந்தனாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இவர் சொன்ன காலகட்டமான 83,84 களிலேயே இக்கூற்று Schmidt போன்ற மருத்துவ அறிஞர்களால் மறுக்கப்பட்டது. HIV என்னும் வைரஸ் கிடையாது என்று ஒரு கூட்டம் மறுத்தது. இதை ஆராய்ந்து அறிவு ரீதியாக மறுத்தவர்கள் HIV என்னும் வைரஸ் இல்லை என்று மறுக்கவில்லை. இவ்வைரசுக்கும் எய்ட்ஸ் நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்றே மறுத்தனர். இக்கருத்தை அதாரபூர்வமாக மறுத்தவர்களில் முதல் இடத்தைப் பிடிப்பவர் Peter Duesberg என்பவரே.
இதைப் படிக்கும் பொது எம்மனதில் பல கேள்விகள் பிறக்கும். கண்ணுக்கு முன்னால் பலர் எயிட்ஸ் நோயில் இறக்கின்றனரே என்பதே அக்கேள்வி.
HIV வைரசைப் பொருத்தவரை அது ஒரு அப்பாவி வைரஸ். ஆபிரிக்காவில் இவ்வைரஸ் தொற்றியுள்ள எத்தனையோ பேர் எயிட்ஸ் இன்றி வாழ்கின்றனர். ஒருவருக்கு HIV தொற்றியுள்ளது என்று பரிசோதனையில் அறியப்பட்டால்( செய்யும் பரிசோதனை கூட கேலிக்கூத்தானது என்ற விமர்சனம் இருப்பது தனி) அவனது நிலை என்ன என்று சிந்தித்துப் பாருங்கள்? அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி நான் எவ்வளவு காலம் உயிர் வாழ்வேன் என்பதாகும். அப்போது டாக்டர் சொல்லும் பதில் இதுதான்..அண்ணளவாக 8 வருடம் நீ உயிர் வாழ்வாய். நான் தரும் மருந்தை நீ உட்கொண்டால் 15 வருடம் வரை வாழலாம் என்று கூறுவார். 7 வருடம் அதிகமாக வாழக்கிடைப்பதால் தனது மொத்த சொத்தை இழந்தாவது டாக்டர் சொல்லும் மருந்தைக் குடிப்பார். டாக்டர் சொன்னது போல 15வருடங்கில் இறந்து விடுவார். உண்மையில் இவர் அந்த மருந்தை உட்கொள்ளாவிட்டால் அல்லாவின் நாட்டப்படி அதிக வருடம் வாழ்ந்திருப்பார். இங்கு HIV எயிட்ஸ் நோயை ஏற்படுத்த வில்லை. மாறாக அதற்கு வழங்கப்பட்ட AZT எனும் மருந்துதான் அவனை எயிட்ஸ் நோயாளியாக மாற்றியது. இதுதான் உண்மை. இந்த மருந்து ஏற்கெனவே புற்று நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்டு அதிகம் நச்சென்பதால் நிராகரிக்கப்பட்டது.
HIV இனால் எயிட்ஸ் தொற்றாது என்பதை பரிசோதனை மூலம் நிரூபிக்க Robert Willner என்னும் டாக்டர் தனக்குத் தானே HIV வைரசினை ஸ்பெய்ன் நாட்டில் ஒரு தொலைகாட்சி அலைவரிசையில் நேரடியாக தனது உடம்புக்குள் உட்செலுத்தி நிரூபித்தார். (28 October 1994 )
92 தொடக்கம் 93 வரை உள்ள காலப்பகுதிகளில் இக்கருத்துக்கள் பிரித்தானியாவில் வெளியாகும் The Sunday Times பத்திரிகையில் தொடராக எழுதப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இரு தரப்பிலும் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டாலும் இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம் ஒரு அதிகார வர்க்கம் நினைத்தால் இல்லாத நோயைக் கூட உண்டாக்க முடியும் என்பதே. நோய்க்கான மருந்தே நோய் உண்டாக்கும் காரணியாக இருக்கலாம் என்பதை பெரும் பெரும் படித்த விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்கிறார்கள் என்று இங்கு நிரூபிக்கப்பட்டது. எனவே நோய் என்பது நிவாரணம் என்பதும், மருந்து என்பது நோய்க்காரணி என்பதும் இல்லுமினடிகளின் தலைக்கீழ் கோட்பாடு என்ற உண்மை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். தொடரும் இன்ஷா அல்லாஹ்.

Who are the nasarash
ReplyDelete8. விஞ்ஞானம் என்ற போர்வையில் அஞ்ஞானம் புகுத்தப்படும்.(காடழித்து நாடு செய்யும் மரபு மாறி காடு வளர்க்கப்படும். சூழல் மாசு என்ற பொய்யான விஞ்ஞானம் புகுத்தப்பட்டமை போன்ற ஏராளமான விடயங்கள் பின்னர் விளக்கப்படும்) idhu yeppadi iluminati yin velayaga irukka mudiyum
ReplyDeletekadu valardhal iyarkai valarum thaanae vunavu panjam theerum thaanae?
Thelivaga vilakkavum please
@seyed mohamed buhary, ABOVE MENTIONED DETAILES ARE TURE .go to youtube then typE "
ReplyDeleteANATOMIC THERAPY" BY HEALER BASKER .HE HAVE EXPLAINED ABOUT THIS TOPICES.
also about illuminalies type you tube "world politices by pease o master"
DeleteThanks for your valuable information....
ReplyDeleteBy,
Yuvarajan
This comment has been removed by the author.
ReplyDeleteநாடு செய்யும் மரபு மாறி காடு வளர்க்கப்படுவது இலுமினாட்டிகளின் வேளையா?
ReplyDeleteநான் நினைக்கிறேன் காடை அழித்து கட்டிடங்கட்டுவது வேண்டுமானால் இலுமினாட்டிகளின் வேலையாக இருக்கலாம்
நாடு செய்யும் மரபு மாறி காடு வளர்க்கப்படுவது இலுமினாட்டிகளின் வேளையா?
ReplyDeleteநான் நினைக்கிறேன் காடை அழித்து கட்டிடங்கட்டுவது வேண்டுமானால் இலுமினாட்டிகளின் வேலையாக இருக்கலாம்
இதென்ன நீங்கள் சொல்வதை படித்தால் அல்லாஹ் மட்டுமே கடவுள் என்பது போல் உள்ளதே
ReplyDeleteஎனக்கு இதை பதிவு செய்த நபர் ஒருவர் படித்தாலும் போதும்
ஏனெனில் மேலே ஒருவருடைய கருத்து மறைக்கப்பட்டு இருந்தது
இந்தியர்களின் சகோதரத்துவத்தை பிரிக்க வேண்டாம்
நான் கூறுவது மிகையாகவும் இருக்கலாம் என் பார்வையில் பட்டதை கூறியுள்ளேன்
இது இஸ்லாமிய பார்வையில் இலுமிணாட்டியா?.
ReplyDeleteஉங்கள் புரிதல் பல இடங்களில் தவறு
இஸ்லாமியர்களாகிய நீங்கள் பைபிளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்னவோ பவுலை ஏற்றுக்கொள்வதில்லை அவர் மீது ஏன் இந்த ஆறாத கோபம் தெரியவில்லை...
ReplyDeleteகிறிஸ்தவம் அரசியல் ரீதியாக ரோம கிறிஸ்தவமாக்கப்பட்டதுதான்..அது அப்படித்தான் ஆகும் அது அந்திகிறிஸ்த்துவுக்கான ஆயத்தம் என்பதை பைபிள் முன்னமே அறிவித்துவிட்டது...மேலும் திரித்துவம் நாம் பழைய ஏற்பாட்டு நூல்களிலே பார்க்கமுடியும் இல்லுமினாட்டிகளை பவுல்தாம் அதிகமாக எச்சரிக்கின்றார்... பவுல் வேதத்துக்கு எதிராக ஒன்றும் சொல்லிவிடவில்லை அவர் சபை ஒழுங்குமுறைகளைதாம் கற்பிக்கிறார்...வேத அடிப்படையைஅவர் மாற்றயமைக்கவில்லை...!
திரித்துவம் பவுல் செசால்லும் முன்பே
இயேசு பரமேறும் போது பிதா குமாரன் பரிசுத்தஆவியினால் ஞானஸ்தானம் கொடுங்கள் என திரித்துவ தெளிவை சுட்டி காண்பிக்கிறார்..!
திரித்துவம் என்பது வளர்ச்சி பெற்ற அறிவியல் போன்றது....
ReplyDeleteஅணுவை பிளக்கலாம் அதை மூன்று பகுதியாக பிரிக்கலாம் என்பது வளர்ச்சி பெற்ற அறிவியல்.
அதே போல இறைவனை மூன்று தத்துவங்களாக பிரித்து அறிதல் வளர்ச்சியே அன்றி அது தவறானது அல்ல...
ஆவி ஆத்துமா சரிரம் மூன்றும் இணைந்தது மனிதன் மனிதன் ஒன்றுதான் ஆனால் மூன்று நிலைகள் புரிகிறதா..?
இயேசு சரிரம் + ஆவி பரிசுத்த ஆவி + ஆத்மா பிதா = ஒரு இறைவன்
இயேசு சரிரம் + ஆவி பரிசுத்த ஆவி + ஆத்மா பிதா = ஒரு இறைவன் . I love jesus
Deleteஇயேசு சரிரம் + ஆவி பரிசுத்த ஆவி + ஆத்மா பிதா = ஒரு இறைவன் . I love jesus
Deleteதிரித்துவம் என்பது வளர்ச்சி பெற்ற அறிவியல் போன்றது....
ReplyDeleteஅணுவை பிளக்கலாம் அதை மூன்று பகுதியாக பிரிக்கலாம் என்பது வளர்ச்சி பெற்ற அறிவியல்.
அதே போல இறைவனை மூன்று தத்துவங்களாக பிரித்து அறிதல் வளர்ச்சியே அன்றி அது தவறானது அல்ல...
ஆவி ஆத்துமா சரிரம் மூன்றும் இணைந்தது மனிதன் மனிதன் ஒன்றுதான் ஆனால் மூன்று நிலைகள் புரிகிறதா..?
இயேசு சரிரம் + ஆவி பரிசுத்த ஆவி + ஆத்மா பிதா = ஒரு இறைவன்
This thread is created to explain about illuminati not to have debet abt relegious
DeleteThis thread is created to explain about illuminati not to have debet abt relegious
Deletewhere is continues
ReplyDeleteஅருமை நண்பரே
ReplyDeleteMasha Allah good information thanks
ReplyDelete