ஞாயிற்றுக்கிழை உக்ரைன் நாட்டுத் தலைநகர் கியெவில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 4-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
கால்பந்து விளையாட்டின் அனைத்து அம்சங்களை முழுமையான அளவில் ஸ்பெயின் இந்த இறுதி ஆட்டத்தில் திறமையாக வெளிப்படுத்தினர் என்று இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சபீர் பாஷா தெரிவித்தார்.

களத்தில் ஸ்பெயின்(சிவப்பு) மற்றும் இத்தாலி(நீலம்) வீர்ர்கள்
கடந்த பத்தாண்டுகளாக அடிமட்டத்தில் கால்பந்து விளையாட்டை பலப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் இப்போது பலன்களை அளிக்கிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
பந்தை தம்வசம் வைத்துக் கொள்வதில் ஸ்பெயின் அதிகம் கவனம் செலுத்தி அதனடிப்படையில் ஆட்டத்தை முன்னெடுத்தால், அவர்கள் மைதானத்தில் அதிக நேரம் ஓடி தமது சக்தியை விரயமாக்கவில்லை என்பதையும் சபீர் பாஷா சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்பெயின் அணியின் தலைவரும் கோல் கீப்பருமான காஸிலஸ்
அதே நேரம் இத்தாலிய அணியும் பலம் பொருந்திய அணியாக இருந்த நிலையில், அவர்களின் பயிற்சியாளர் ஒரே சமயத்தின் மூன்று வீரர்களை மாற்றியதும், அதில் ஒருவர் காயம் காரணமாக ஆட முடியாமல் போனதும் இத்தாலிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறுகிறார்.
ஸ்பெயின் அணியின் ஜோர்டி ஆல்பா அடித்த இரண்டாம் கோல், இத்தாலியின் வெற்றிக் கனவை தகர்த்துவிட்டது என்றும், அதன் பிறகு இத்தாலியால் மீள முடியவில்லை என்றும் சபீர் பாஷா கூறுகிறார்.
எனினும் ஒலிம்பிக்ஸ் கால்பந்து ஆட்டங்களில் 23 வயதைக் கடந்தவர்கள் விளையாட முடியாது என்பதால் அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் கானா போன்ற நாடுகளிடமிருந்து ஸ்பெயின் அணி கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் இந்திய அணியின் பயிற்சியாளர் சுட்டிக்காட்டுகிறார்.

No comments:
Post a Comment