Saturday, December 31, 2011

ரஷ்யாவின் துயரம்... செசன்யா..!



செசன்யா....இப்போது என்ன தான் வேண்டும் இந்த பகுதி மக்களுக்கு? 
நான்கே வார்த்தைகளில் சொல்லுவதென்றால்...
"நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு"
இதுதான் இப்போது செசன்யா மக்களுக்கு தேவை. பார்ப்பதற்கு எளிமையாய் தோன்றும் இந்த நான்கு வார்த்தைகளில் தான் விஷயமே இருக்கிறது.

Thursday, December 29, 2011

சீனாவின் அதிசயம் எது...? சீனப் பெருஞ்சுவரா..? அல்லது சீன முஸ்லிம்களா..?



கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார்.

Monday, December 26, 2011

இந்திய, பாகிஸ்தானிய கணினி வல்லுனர்களின் உதவியுடன் அமெரிக்காவுக்கு எதிரான சைபர் யுத்தத்தை ஆரம்பித்தது ஈரான்..!



சைபர் யுத்தம்


“சைபர் யுத்தம் என்பது என்னை பொருத்தவரையில் கராஜில் நிற்கும் பெராரி கார் போன்றது. அது சும்மா நிற்கையில் அமைதியானது. களத்தில் வந்து விட்டால் அதன் வேகத்திற்கு இணை கிடையாது. அது போலத்தான் சைபர் யுத்தம் என்பது.

அமெரிக்காவை சீண்டிவிட்டுள்ளது ஈரான். இனி நாம் யார் என்பதை சைபர் யுத்தம் மூலமும் அவர்களிற்கு காட்டுவோம்”.   Leon Peneta (இயக்குனர் பென்டகன், முன்னாள் இயக்குனர் சீ.ஐ.ஏ.)
அமெரிக்காவின் உளவு விமானம் Drone . இது ஆளில்லா தாக்குதல் மற்றும் உளவு விமானம். இது கடத்தப்பட்டு ஈரானில் தரையிறக்கப்பட்டது. இங்கு விமானக்கடத்தல்காரர்கள் யாரும் இல்லாமலே விமானம் கடத்தப்பட்டுள்ளது. இது நாம் தெரிந்த அதிசயித்த செய்தி.

 யுத்தங்களில் அமெரிக்காவின் தாக்குதல் பலத்தில் பெரும் பங்கு வகிப்பது வான்படை. எதிரியின் தாக்குதல் பலத்தில் பாதியை வான்படை அழித்துவிடும். மிகுதியை தரைப்படையினர் பார்த்துக்கொள்வர். இது வரை கால அமெரிக்க ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் அனைத்திலும் இவ்வாறே நிகழ்ந்துள்ளது.

எதிர்கால யுத்தங்களில் அமெரிக்க வான்படை தங்கியிருக்கும் நவீன விமானங்கள் 3 வகை சார்ந்தவை. Stelth, Delta, Drone. இதில்  Drone என்பது முதல் கட்ட வேலையை செய்வது. துல்லியமான உளவு தகவல்கள், முக்கிய இலக்குகள் மீது நெருங்கித் தாக்குதல் போன்ற அதி முக்கியமான வேலைகளை செய்வது. அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ.யின் இயக்கத்திற்கு பெரும் பங்கு வகிப்பது. கப்டன் அமெரிக்காவின் நம்பிக்கை நச்சத்திரம் தான் ட்ரோன்.

கடந்த மாத நடுப்பகுதியில் அமெரிக்காவின் பல நிலைகள் வைரஸ் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டன. Skipot   என்ற பெயரில் உள்நுழைந்த இந்த வைரஸ்கள் அமெரிக்காவின் பிரதம வைரஸ் தடுப்பான Symentec Anti Virus  மென்பொருளின் ஊடாக கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.  Symentec நிறுவன தலைவர் இது சாதாரண ட்ரோஜன் வகையினது என அறிவித்தார். அமெரிக்காவின் விமானந்தாக்கி கப்பல், கடற்படைத்தளம், பென்டகன், விமானத்தளம் போன்றவற்றில் இதன் தாக்கம் உணரப்பட்டது.



இந்த ட்ரோஜன் வைரஸை அழித்தபோதும் இதனுடன் இணைக்கப்பட்ட உபரி வைரஸ் அமெரிக்காவின் பல படைத்துறை உயர்நிலை அதிகாரிகளின் கணனிகளில் பரவியது. குறிப்பாக Secret Drone Program நிபுணர்களின் கணனிகளில். இதுவே DoD (Defence of Drone)   ட்ரோன் விமான தரையிறக்கத்தில் முக்கிய பங்கினை வகித்துள்ளது. உஸாமா பின் லாதின் மீதான தாக்குதல் என அமெரிக்கா கூறிக்கொள்ளும் அபோதாபாத் தாக்குதலின் போது இந்த விமானமே முற்று முழுதான பங்களிப்பை வழங்கியது. இதன் வழிநடத்தலின் பேரிலேயே அந்த ஒப்பரேஷன் செய்து முடிக்கப்பட்டது.

இப்போது அமெரிக்கா வெட்கத்திலும் வெறுப்பிலும் உள்ளது. கோலியாத்தை வென்ற தாவுத் போல அமெரிக்கா தனது கணனி தொடர்பான மெகா டிபென்ஸ் ஸிஸ்டம் பற்றிய நம்பிக்கையில் இருக்கையில் சாதாரண ஒரு வைரஸின் ஊடாக அமெரிக்காவையே தடுமாற வைத்தது அமெரிக்காவை பாரிய கவலைகளை நோக்கி முன்தள்ளியுள்ளது.

அமெரிக்க அனுகுண்டுகள், ஏவுகணைகள் போன்றவற்றின் கட்டுப்பாட்டு கணனிகளில் ஈரான் என்ன விதமான வில்லங்கங்களை விதைத்துள்ளது என்பதில் முடியை பிய்த்துக்கொண்டிருக்கின்றனர் அமெரிக்க கணனிவியல் நிபுணர்கள். இப்போது ஈரானை தாக்க போய் பாரிய இழப்புக்களை சந்திக்க வேண்டுமோ எனும் அச்சத்தில் இருக்கிறது அமெரிக்கா.



பெங்களுர், ஹைதராபாத் போன்ற இந்திய நகரங்களில் இருந்து 460 இற்கும் மேற்பட்ட கணனியியல் நிபுணர்கள் ஈரானில் முக்கிய நிலைகளில் சேவை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் டுபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக அந்த நாடுகளிற்கு உயர் தொழில் பெற்று சென்றவர்கள். ஓரிரு மாதங்களுல் இவர்களில் பலரை ஈரானிற்குள் அதிகபட்ச சம்பளத்திற்கு கடத்தியுள்ளது ஈரான். கூடவே பாகிஸ்தானிலிருந்து 200இற்கும் மேற்பட்ட கணனிவியல் நிபுணர்கள் இதே பாணியில் ஈரானினுல் உள்வாங்கப்பட்டுள்னர். இது நடந்தது 3 வருடங்களிற்கு முன்பு. இதன் பின்னரே சைபர் யுத்தத்தில் ஈரான் களமிறங்கியுள்ளது. அதாவது ஆத்திரமுறும் அமெரிக்கா தனது சைபர் தாக்குதலை ஈரான் மீது நடாத்தினால் என்ன செய்வது என்பதற்கான சில மாற்றுத்திட்டங்களை வகுத்த பின்பு என்பது குரிப்பிடதக்கது…..

Wednesday, December 21, 2011

அமெரிக்க தளங்களிலிருந்து ஈரானுக்கெதிராக ஏவுகணைகள் ஏவப்பட்டால்..! இலக்குகளை ஈரான் தீர்மானிக்கும்..!

 

அதிரச்சியில் உறைந்த அமெரிக்கா...!


இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் ஈரானுடன் போர் செய்வதற்கு ஆயத்தம் செயது கொண்டிருக்கின்ற இந்த நிலையில் சென்றவாரம் சகல ஊடகங்களிலும் ஒரு செய்தி வெளியானது. இந்த செய்தியைப் பார்த்ததும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் அதிரச்சியில் உறைந்தது.


அது என்ன செய்தி..! 


ஈரான், அமெரிக்க உளவு விமானம் ஈரானிய வான் பரப்பில் பறந்த போது விமானத்திற்கும் அமெரிக்க தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான நுண்அலை இயக்க தொடர்பை துண்டித்ததோடு அல்லாமல் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை தம் வசப்படுத்தி தாம் நினைத்த இடத்தில் சிறப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வு அமெரிக்காவை மறைமுகமாக அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. தரையிறக்கும் காட்சிகளை ஈரான் வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி இப்படி கூறுகிறார் எமது US RQ-170 உளவு விமானம், ஈரானில் விழுந்து விட்டது. அதை, ஈரானியர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த விமானத்தை எம்மிடம் திருப்பித் தரவேண்டும் என்று தெரிவிக்கிறார்.
அதேபோன்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இது குறித்து கூறுகையில், “ஈரான் சிறை பிடித்துள்ள, அமெரிக்க விமானத்தை திருப்பித் தருமாறு பலமுறை, ஈரான் நாட்டிடம் கோரி உள்ளோம். ஈரான் நாட்டின் தற்போதைய நடத்தை, அனைவருக்கும் தெரியும். எனவே, அந்நாட்டிடம், நாங்கள் இதற்கு மேல் எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். 
இந்த செய்தி அதாவது அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் RQ-170 ஈரான் ராணுவத்தினால் வெற்றிகரமாக தரையிறக்கப் பட்ட செய்தி சகல இணையத்தளங்களிலும் வெளியாகியது. என்றாலும் இந்த செய்தியிலுள்ள மிகப்பெரிய ராணுவ உண்மையினை சொல்ல மறந்து விட்டன. ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் அது தெரிந்தது. அதனால்தான் அஞ்சி நடுங்கியது.
அது என்ன விசயம்..?
அமெரிக்கா போன்ற நாடுகள் போரில் பயன்படுத்துகின்ற 100% ராணுவ தொழிநுட்பம் எப்படி என்றால் தற்போதைய அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் RQ-170 தொழிநுட்பத்தை ஒத்ததாகும். அதாவது ஏவுகணைகளை ஏவுதல், அது செல்ல வேண்டிய பாதை, அது வெடித்து சிதற வேண்டிய இலக்கு போன்ற அனைத்த விசயங்களையும் அமெரிக்க தரைக்கட்டுப் பாட்டு மையத்திலிருந்து நுண் அலை இயக்கத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. பாரிய குண்டுகளையும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லக் கூடிய பிரமாண்டமான யுத்த விமானங்களிலும் இதே தொழிநுட்பம்தான் பயன்படுத்துகின்றது. இந்த தொழிநுட்பத்தினை திசை திருப்பக் கூடிய வல்லமையை ஈரான் ராணுவத்தினர் பெற்றுள்ளனர்.
அதாவது அமெரிக்க தளங்களிலிருந்து ஈரானுக்கெதிராக ஏவுகணைகள் ஏவப்பட்டால்.. ஈரான் ராணுவம் எப்படி உளவு விமானம் RQ-170 யை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நினைத்த இடத்திலே தரையிறக்கினார்களோ அதே போன்று... ஏவுகணைகளையும் வான்வெளியில் வைத்தே கட்டுப்படுத்தி இஸ்ரேல் போன்ற அமெரிக்க நேசநாடுகளின் பககம் வெடித்து சிதறுவதற்கு திருப்பி விடலாம் அலலது எந்த தளத்திலிருந்து வந்ததோ அந்த தளத்திற்கு அனுப்பி விடலாம்.

ஈரானின், தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் ஏவுகணை/விமானத்திற்கும் இடையிலான நுண்அலை இயக்க தொடர்பை துண்டிக்கும் தொழிநுட்பம்